பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/427

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

நாடக மேடை நினைவுகள்


கூற வேண்டும். தினம் காலையிலும், மாலையிலும் எங்கள் ஆக்டர்களையெல்லாம், கொழும்பில் பார்க்க வேண்டிய இடங்களுக் கெல்லாம், மோட்டார் வண்டிகளில் அழைத்துக் கொண்டு போய் விடுவார்கள்; தினம் யார் வீட்டிலாவது விருந்துக்குச் சிலரை அழைத்துக்கொண்டு போவார்கள். அதிகமாக கூறுவதேன்? எங்களைத் தங்கள் விருந்தாளிகளாகப் பாவித்து, எங்கள் சௌகரியங்களை யெல்லாம், ஒன்றையும் மறவாமலும் விடாமலும், பார்த்து வந்தனர். எங்களுள் யாராவது ஒருவர் ஏதாவது ஒன்று இஷ்டப்படுவதாகச் சொல்லவேண்டியதுதான், அரை மணிக்குள் அது எங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்துவிடும். “விருந்தோம்பல்” என்பதைப்பற்றி நான் படித்திருக்கிறேன். அது இத்தகையது என்பதை இவர்களிடமிருந்து நான் பிரத்யட்சமாகக் கற்றேன். கொழும்பு நேசர்கள் எங்களுக்குச் செய்த உதவிகளில் இரண்டொன்றை இங்கு எடுத்தெழுதுகிறேன். இரண்டு மூன்று நாட்கள் கழித்து எனதுயிர் நண்பர் நாங்கள் இருந்த வீட்டில், நாற்பது பெயர் ஒன்றாய் இருப்பதென்றால், கொஞ்சம் அசௌகர்யமாயிருக்கிறதென்று ஏதோ பேச்சில் தெரிவித்தார். உடனே, அவரையும், இன்னும் மூன்று நான்கு பெயரையும் சர்.பி. ராமநாதன் வீட்டிற்கு, அவர் மூத்த குமாரனான மிஸ்டர் ராஜேந்திரா என்பவர் அழைத்துக்கொண்டு போய்விட்டார். என்னையும் வரும்படி அழைக்க, நானும் போய்விட்டால் இங்கிருப்பவர்களெல்லாம் ஏதாவது சொல்வார்கள், என்னை மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். ஒரு நாள் சாப்பாட்டு சமாச்சாரங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வெங்கடாசல ஐயர், பட்டணத்திலிருந்து கொண்டுச் வந்த நெய் தீர்ந்து விட்டது.

கடைத்தெருவில் கிடைக்கும் நெய் நன்றாயில்லை யென்று அவர் தெரிவித்தார்; ஒரு மணி நேரத்திற்கெல்லாம், நாங்கள் கொழும்பில் இன்னும் இருக்கவேண்டிய நாட்களுக்கெல்லாம் வேண்டிய புத்துருக்கு நெய் வந்து சேர்ந்துவிட்டது! இதில் வேடிக்கை என்னவென்றால், அதை யார் அனுப்பியது என்பதை இதுவரையில் அறியேன்! அனுப்பித்தவர்களுக்கு நான் வந்தனம் செய்ய வேண்டுமே அதற்காவது சொல்லுங்கள் என்றாலும், ஒருவரும் சொல்ல