பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/444

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்தம் முதலியார்

429


நாங்கள் எல்லாம் வேஷம் போட்டுக் கொள்வதற்கு ஆரம்பஞ்செய்து கொண்டிருந்தபொழுது, இந்தக் காட்சியில் உபயோகப்படுத்துவதற்காக, கண்டிராக்டர் செய்தனுப்பிய, பாடை வந்து சேர்ந்தது. இதைப் பார்த்ததும், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு கோபமடைந்து, “நான் இப்படியா செய்தனுப்பச் சொன்னேன்? இதில் நான் படுக்கவே மாட்டேன்! இந்தக் காட்சியை வேண்டுமென்றால் விட்டுவிடுங்கள்!"என்று கோபித்து மொழிந்தார். அவரை நான் சமாதானம் செய்து கொண்டிருக்கும்பொழுது, சிறிது நேரத்திற்கெல்லாம், எனது நண்பர் விரும்பியபடி அழகிய ஒரு பல்லக்கை நான்கு பெயர் தூக்கிக் கொண்டு நுழைந்தார்கள். அதைக் கண்டதும் எனது நண்பர் கோபமெல்லாம் மாறி மிகவும் சந்தோஷப்பட்டுக் கண்டிராக்டர் கொண்டு வந்ததை எடுத்து வெளியில் எறியும்படி உத்தரவு செய்தார். பிறகு நான், “இந்த அழகிய பல்லக்கு எங்கிருந்து வந்தது?” என்று விசாரித்ததில், அது வந்து சேர்ந்த விதம் பின் வருமாறு என்றறிந்தேன்:- முன்னாள் இரவு இப்பல்லக்கு இப்படி இருக்க வேண்டுமென்று எங்களிடமிருந்து கேட்டறிந்த மாஹேசர், மறுநாள் காலை முதல், நாங்கள் அறியாதபடி, அவர்களுடைய பெரிய தோட்டத்தின் ஒரு மூலையில், தன் வேலையாட்களைக் கொண்டு ஒன்றை மிகவும் சிரமப்பட்டுக் கட்டிவைத்தாராம். இதைச் சரியாக ஜோடிப்பதற்கு அன்று சாயங்காலம் வரைக்கும் பிடித்ததாம். இதில் ஒரு முக்கியமான சமாச்சாரம் என்னவென்றால், சாதாரணமாக எவர்களும் பிணத்தைத் தூக்கும்படியான பல்லக்கைக் காணவும் அருவருப்படைவார்கள்; அதுவும் அன்றைக்கு வெள்ளிக்கிழமை தினம்; தங்கள் வீட்டிலிருந்த பெண்டிர் ஆட்சேபணைகளையும் கவனியாது, இதைச் செய்து அனுப்பிய மாஹேசருக்கு’ நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? அந்தப் பல்லக்கில் படுக்கும்பொழுது, எனது நண்பருக்குச் சிரமமில்லாமலிருக்கும் படி, அதன்மீது பட்டு மெத்தைகளையும் பரப்பி அனுப்பினார்!

இத்தகைய அன்பினுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? இவ்வுலகத்தில் அநேகர் சுய நன்மையைப் பாராட்டுங் குணத்தைக் கண்டு என் மனம் வெறுப்படையும் பொழுதெல்லாம். அதற்கு மாறாக, சுய நன்மையைப் பாராதவர்கள் இவ்வுலகில் ஆயிரத்திலொருவராவது இருக்