பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/446

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப.சம்பந்த முதலியார்

431


கிருதம்; முதலியார், தமிழ்ப் பதம்! மஹா முதலியார் என்பது சிலோன் கவர்ன்மெண்டார் கொடுக்கும் பட்டப் பெயர்;

சென்னையில் திவான் பகதூர் என்கிற மாதிரி, இவர் நாடகத்தைப் பார்த்துக் கெண்டிருந்தபொழுது நாடகத்தை மெச்சிவிட்டு; அருகிலிருந்த தனது நண்பராகிய டாக்டர் சின்னையா வென்பவரை; பத்மநாபராவ், ரங்கவடிவேலு இவர்களைப் பார்த்து இந்த ஸ்திரீகள் எந்த ஜாதியார் என்று கேட்க, அவர், இவர்கள் ஸ்திரீகளல்ல; ஆண் பிள்ளைகளேயென்று பதில் உரைத்தும், நம்பாது, “வாஸ்தவமா இவர்கள் ஸ்திரீகள்தான். இந்த உண்மையை இங்கு வெளியிட்டால் இவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடப்போகிற தென இச் சபையார் அதை மறைத்துச் சொல்லுகிறார்கள் போலும்!” என்று பதில் உரைத்தனராம். இதை டாக்டர் சின்னையா என்பவரே என்னிடம் நேராக உரைத்தார். இவ்வாறு கூறினவருடைய சந்தேகம் நிவர்த்தியாகும் பொருட்டு, பத்மநாபராவ், ரங்கவடிவேலு முதலிய ஆக்டர்களையும் என்னையும் மறுநாள் அவர் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுபோய், இன்னின்னாரென அவருக்குத் தெரிவித்தார். அதன்மீது அனைவரும் கொஞ்ச நேரம் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்பிவிட்டோம்.

சாரங்கதர நாடகத்தில் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு நடித்தது எல்லோராலும் மிகவும் மெச்சப்பட்டது. மனோஹரன் நாடகத்தையும் இதையும் மறுமுறை பார்க்க வேண்டுமென்று பலர் கேட்டதற்கு நாங்கள் இணங்குவதற்கில்லாமற் போயிற்று. இந்தச் சாரங்கதர நாடகத்துடன் கண்டிராக்டாக ஏற்படுத்தப்பட்ட ஐந்து நாடகங்களும் முற்றுப்பெற்றன. ஏறக்குறைய ஒவ்வொரு நாடகத்திற்கும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலானபடியால், கண்டிராக்டருக்கு நல்ல லாபம் கிடைத்தது. அதற்காக எனது நண்பர்களில் சிலர் வெறுப்படைந்த போதிலும், எனக்குத் திருப்திகரமாகவேயிருந்தது. லாபம் வந்ததனால் சரியாகப் போய்விட்டது; நஷ்டம் வந்திருந்தால் கண்டிராக்டர்தானே அதைப் பொறுத்திருக்க வேண்டும்? மேற்சொன்னபடி ஐந்து நாடகங்களும் முடிந்த பிறகு எங்களையெல்லாம் நல்வரவேற்று, எங்கள் சௌகர்யத்திற்கெல்லாம், முதலில் எல்லா ஏற்பாடுகளையும் செய்த ஹானரபிள் கனகசபை