பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/448

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

433


நடந்தது. இவ்வாறு நடித்ததில் ஒரு விசேஷத்தை நான் குறிக்க வேண்டும். இந் நாடகத்தில் “வீர்சிங்” என்பது ஒரு முக்கியமான பாத்திரம். அதைச் சென்னையில் கோபாலசாமி முதலியார் என்பவர் சாதாரணமாக நடிப்பார். நாங்கள் புறப்படும் பொழுது இந்நாடகம் ஆடுவதாக யோசனையில்லாதபடியால், அவரை இலங்கைக்கு அழைத்துக் கொண்டு போகவில்லை. அதன்மீது திடீரென்று இந் நாடகத்தை வைத்துக்கொண்டபோது, எனது இளைய நண்பர் டி.சி.வடிவேலு, சாதாரணமாக அவர் ஸ்திரீவேடமே தரிப்பவராயினும், இந்த ஆண் வேடத்தை எடுத்துக் கொள்வதாகக் கூறியதுமன்றி, அப்பாகத்தை நன்றாய்ப் படித்து மிகவும் நன்றாய் நடித்தார். அப்படி நடித்ததற்காக நான் செய்த கைம்மாறு என்ன வென்றால், அவருடன் ஒரு காட்சியில் நான் வாள் யுத்தம் செய்ய வேண்டி வந்த பொழுது இவரது கையில் என் வாளால் நன்றாய்க் காயப்படுத்தினதே! அவர் இன்றைத்தினம் அகஸ்மாத்தாய் என் வீட்டிற்கு வந்து என்னுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, இந் நாடகத்தைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று நான் கூறியபொழுது, இதை எனக்கு ஞாபகப்படுத்தினார்.

இந்நாடகத்தின் வசூலில் செலவு போக, பாதிப் பணத்தை டூபர்குலோசிஸ் வியாதி நிவாரணநிதிக்குக் கொடுத்துவிட்டு, மிகுந்த பாதியை நாம் பட்டணம் கொண்டு போக வேண்டியதில்லை; இவ்வளவு அன்பும் ஆதரவுமுடன் நம்மை உபசரித்த சிங்கள சிநேகிதர்களுக்கே செலவழிக்க வேண்டுமென்று, அவர்களுக்கெல்லாம் ஒரு சிறு விருந்தளிக்க வேண்டுமென்று தீர்மானித்து, மறு நாள் அவர்களுக்கு அவ்விருந்தை ஏற்பாடு செய்து, எங்கள் நாகடத்திற்கு வந்திருந்த சீமாட்டிகளையும் சீமான்களையும் வரவழைத்தோம்.

மறுநாட் காலை விருந்தினர்க்கு உபசரணைக்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்யும் பொருட்டு பப்ளிக் ஹாலுக்குப் போய் அவைகளையெல்லாம் செய்து விட்டு, நாங்கள் கொழும்புக்கு வந்ததற்கு ஞாபகார்த்தமாக, எல்லோரும் உட்கார்ந்து ஒரு போட்டோ பிடித்துக்கொண்டு, சபை தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தேன். சேர்ந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சென்னையிலிருந்து, சுமார்