பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/450

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

435


கொழும்பை விட்டுப் புறப்பட்டது முதல் சென்னை வந்து சேரும்வரையில் என் மனத்தில் ஒரு பிரார்த்தனைதான் இருந்தது; அதாவது, எப்படியாவது ஈசன் கருணையினால் என் குழந்தையை உயிருடன் காணவேண்டுமன்பதுதான்! ஈசன் என் பிரார்த்தனைக்கிணங்க என் குழந்தையை உயிருடன் கண்டேன். இந்த விஷயமாக, நாடக மேடைக்குச் சம்பந்தமான சமாச்சாரமாக இல்லாவிட்டாலும், நேரிட்ட ஒரு சிறு சமாச்சாரத்தை இங்கு எழுத விரும்புகிறேன். நான் என் வீடு சேர்ந்து குழந்தையின் தேகஸ் திதியைப்பற்றி விசாரித்தபொழுது, என் குடும்ப வைத்தியர், வியாதி அதிகப்பட்டிருப்பதால் வீட்டிலுள்ளவர்கள் பார்த்துக் கொள்ள முடியாது; இரவும் பகலும் மணிப்பிரகாரம் ஔஷதம் முதலியன கொடுப்பதற்காக, நர்ஸ் இருக்க வேண்டியது அதி அவசியம் என்று ஏற்படுத்திய ஒரு ஆங்கில நர்ஸ், எனக்குக் கூறியதை இங்குத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன்; “என்ன ஆச்சரியம், மிஸ்டர் முதலியார்! குழந்தைக்கு விடாது ஐந்தாறு தினங்களாக 104, 105 டிக்ரி ஜ்வரம் இருந்து கொண்டிருந்தது; என்ன மருந்து கொடுத்தாலும் கொஞ்சமாவது இறங்கவேயில்லை; புத்தி மாறாட்டத்திலும் உங்களைப்பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தது. நீங்கள் திரும்பி வருவதாக வந்த தந்தியை அதற்குக் காட்டி, உங்கள் அப்பா சீக்கிரம் வருகிறார்கள் பயப்படாதே, என்று சொன்னேன்; அந்தக் காகிதத்தை வாங்கித் தன் தலையணையின்கீழ் வைத்துக் கொண்டு உறங்கி விட்டது. அந்த க்ஷணமுதல் படிப்படியாக ஜ்வரம் குறைந்து விட்டது. என்ன வேடிக்கையாய் யிருக்கிறது!” என்றாள். அந்த அம்மாளுக்கு வேடிக்கையாயிருந்திருக்கலாம். எனக்கு வாஸ்தவமாயிருந்தது. என் சுய நன்மையைப் பாராட்டி, நான் உடனே புறப்பட்டு வருவதாகத் தந்தி கொடுத்திராவிட்டால், என் குழந்தை இறந்திருக்குமென்று நான் உறுதியாக நம்புகிறேன். இன்றளவும் அந்த நம்பிக்கை மாறவில்லை. என் மனத்திற்குக் கஷ்டமாயிருந்தபோதிலும் என் கடமைப்படி நான் செய்தபடியால் கடவுள் அக் குழவியை எனக்குக் காப்பாற்றியருளினார் என்று முழு மனத்துடன் நம்புகிறேன். இதை வாசிக்கும் எனது நண்பர்களில் சிலர், ‘இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? காக்கை ஏறப் பனம்பழம்