பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/453

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

438

நாடக மேடை நினைவுகள்


இந்திய தேசச் சரித்திரத்தின் சில முக்கிய காட்சிகளைத் தோற்றக் காட்சிகளாகக் காண்பித்தோம்,

இவ்வருஷம் எங்கள் சபையின் தெலுங்குப் பிரிவினர் வேதம் வெங்கடாசல ஐயர் இயற்றிய “விதிலேக வைத்தியுடு” என்னும் நூதனத் தெலுங்கு நாடகத்தை நடத்தினார்கள். இது பிரான்சு தேசத்திய பிரபல நாடகக் கவியாகிய மாலியர் என்பவர் எழுதிய பிரஹசனமொன்றின் மொழி பெயர்ப்பாம். இதை நான் தமிழில் அமைக்கலா மென்றிருக்கிறேன், பரமேஸ்வரர் ஆயுள் கொடுப்பாராயின். இவ் வருஷத்திய தசராக் கொண்டாட்டத்தில் நடந்த ஒரு விசேஷத்தை இனி எழுதுகிறேன். தசராவில் ஏதாவது புதிதாய்ச் செய்ய வேண்டுமென்று வற்புறுத்திக் கொண்டிருந்த எனது பால்ய நண்பர் வி.வி.ஶ்ரீனிவாச ஐயங்காரின் வேண்டுகோளைத் தட்டக் கூடாது என்று எண்ணினவனாய், எங்கள் சபையிலுள்ள எட்டு ஸ்திரீ வேடம் தரிக்கும் ஆக்டர்களைக்கொண்டு, கோலாட்டம் போட்டு வைக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். அதற்காக ஒரு நட்டுவனையும் பிடித்து இரகசியமாகக் காலை வேளைகளில் ஒத்திகைகள் நடத்தி வந்தேன்; ஒத்திகைளெல்லாம் முடிந்தவுடன் இதைத் தசராவில் ஒரு நாள் போடுவதென்றால் அதற்கு ஒரு காரணம் வேண்டுமேயென்று யோசித்து “சபாபதி முதலியாரின்” தங்கை வயதடைந்த சடங்கிற்காக அவர் வீட்டில் கோலாட்டம் நடக்கப்போகிறதெனப் பெயர் வைத்துத் தசராவின் முதல் நாள் கொண்டாட்டத்தில் சபாபதி முதலியார் தனது நண்பர்களையெல்லாம் அழைப்பது போல, சபையின் அங்கத்தினர்க்கெல்லாம் பத்திரிகை கொடுக்கச் செய்தேன். ஆயினும் இதில் ஒரு கஷ்டம் வந்து சேர்ந்தது. சபையிலுள்ள ஸ்திரீ வேஷதாரிகளெல்லாம் கோலாட்டம் போடும் தாசிகளாக வேடம் பூண வேண்டி வந்தது. ருதுவடைந்த சபாபதி முதலியாரின் தங்கையாக உட்கார்ந்திருக்க வேறொருவரும் கிடைக்கவில்லை! வேடம் பூணக்கூடிய உருவமுடைய சிலரை அண்டிக் கேட்டபோது, அவர்கள் அந்தப் பெண் வேடம் பூணுவதென்றால் வெட்கமாயிருக்கிறதென மறுத்தனர். இந்தத் தர்ம சங்கடத்தினின்றும் தப்ப வேறு வகையில்லாதவனாய், அந்த வேடம் நானே பூணத்