பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/455

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

440

நாடக மேடை நினைவுகள்


சம்பந்தம்” என்று தெரிவித்தாராம். இதைக் கேட்டவுடன் மிஸ்டர் கிருஷ்ணன் “சம்பந்தமா!” என்று உரக்கச் சொல்லி நகைத்துவிட்டனராம். உடனே இந்தச் சமாச்சாரம் ஹால் எங்கும் பரவிவிட எனது நண்பர்களெல்லாம் கைகொட்டி நகைத்து விட்டனர் என்பதை அறிந்தேன்.

அன்றைத்தினம் கோலாட்டம் போட்டது மிகவும் நன்றாயிருந்ததெனச் சொல்லி, மறுபடியும் அதைப் போடும்படி சபையின் அங்கத்தினர்கள் கேட்டது எனக்கு ஞாபகமிருக்கிறது.

இவ்வருஷம் நடந்த நிகழ்ச்சிகளுள், மிகுந்த வியசனகரமான தொன்று, எங்கள் சபையின் அத்யட்சகராயிருந்த ஆனரபில் வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் மரணமே. இந்த வருஷத்தின் ஆரம்பத்தில் அவர் ஹைகோர்ட் ஜட்ஜ் பதவியிலிருந்து, சென்னை கவர்னர் அவர்களுடைய கவுன்சில் மெம்பராக நியமிக்கப்பட்டார். அதைக் கொண்டாடும் பொருட்டு, ஜனவரி மாதம் 29ஆம் தேதி, சபையில் பெரும் மகிழ்ச்சி கொண்டாடி ஒரு விருந்து செய்தோம். ஒரு வருஷத்திற்குள்ளாகவே அவர் காலமாவார் என்று ஒருவரும் எண்ணவில்லை. ஆயினும் தெய்வம் விதித்த விதி அப்படியிருந்தது. இவரது குணாதிசயங்களைப் பற்றி ஒரு சந்தர்ப்பத்தை இங்கு எழுத விரும்புகிறேன். இவ் வருஷம் சென்னை கவர்னர், தனது ஐந்து வருட ஆளுகை முடிந்து சீமைக்குத் திரும்பிப் போக வேண்டிய சமயம் வந்தபொழுது, சென்னையில் சில தனவான்கள் அவருக்கு உபசரணையாக ஒரு விருந்து செய்ய வேண்டுமென்று தீர்மானித்தனர். மற்றும் சிலர் அங்ஙனம் செய்யக்கூடா தென்று ஆட்சேபித்தனர். இவ்வாறு சென்னையில் இதைப்பற்றி இரண்டு கட்சிகள் ஏற்படவே, எங்கள் சபையாரைக் கவர்னரது உபசரணை விருந்தில் ஏதாவது நாடகமாட வேண்டுமென்று ஒரு திறத்தார் கேட்க, அதைப்பற்றி இரண்டு கட்சிகள் இருக்கும் பொழுது, சபையார் இதில் கையிட்டுக் கொள்ளக் கூடாதென்று தீர்மானித்தோம். பிறகு வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த உபசரணை ஐலண்டு கிரௌண்டில் நடக்க, எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் நானும் வரவழைக்கப்பட்டுப் போயிருந்தபொழுது, ஒரு மூலையில் உட்கார்ந்து வேடிக்கை