பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/456

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

441


பார்த்துக்கொண்டிருந்தோம். அங்குக் கொட்டகையில் வி. கிருஷ்ணசாமி ஐயர் வந்தவுடன், தூரத்திலிருந்த நாங்கள் நமஸ்காரம் செய்வதைக் கண்டவராய், உடனே நாங்கள் இருந்த இடம் விரைந்துவந்து எங்கள் கையைக் குலுக்கிவிட்டு, என் காதில் மெல்ல “நம்முடைய சபை செய்தது மிகவும் சரி!” என்று ரகசியமாய்ச் சொல்லிவிட்டுப் போனார்! நாங்கள் இவர் எங்கள் சபையின் அத்யட்சகராயிருந்தும், கவர்னா கவுன்சில் மெம்பராயிருந்தும், கவர்னருக்குச் செய்த உபசரணையில், எங்கள் சபை சேரக் கூடாது என்று தீர்மானித் ததைப்பற்றி எங்கு கோபித்துக் கொள்ளுகிறாரோ என்று பயந்திருந்தோம். இதை அறிந்தவராய், அப் பயம் நீங்கும்படி அச்சமயம் எங்களிடம் இதை வந்து தெரிவித்துப் போனது நான் என்றும் மறக்கற்பாலதன்று.

என்னிடம் மிகுந்த அன்பு பாராட்டிய இச்சீமானை விட்டு அகலுமுன் இவரைப்பற்றிய இன்னொரு சிறு கதையை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன். ஒரு முறை தெலுங்கு நாடகமொன்று நடந்து கொண்டிருந்தது - பிரஹ்லாத நாடகமென்று நினைக்கிறேன் - அதில் பிரமாவினுடைய பாத்திரம் பெரிய தொப்பையை உடைய ஒரு ஆக்டருக்குக் கொடுத்திருந்தனர். அவரைக் கண்டதும், கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் இப் பாகத்தை இப்படிப்பட்ட வருக்குக் கொடுக்கக் கூடாதென்று கண்டித்தவராய் “எங்கே சம்பந்தம்? கூப்பிட்டு வாருங்கள்” என்று, அரங்கத்திற்குள்ளே இருந்த என்னை அழைத்தனர். நான் என்ன சமாச்சாரமோ என்று அவர் அருகிற் போய் நிற்க, “இந்த பிரமா வேஷம் பெரும் குடத்தைப்போல் தொப்பையையுடைய இந்த ஆக்டருக்கு உன்னை யார் கொடுக்கச் சொன்னது?” என்று கேட்டார். “இது தெலுங்கு நாடகம், இதில் நான் ஒன்றும் பிரவேசிப்பதற்கில்லை” என்று நான் பதில் சொல்ல, “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீதான் எனக்கு உத்தரவாதம், இம்மாதிரியான தவறுகள் நடக்காதபடி நீ பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கண்டிப்பாய்ப் பதில் உரைத்தார். இதன் பேரில் நான் என்ன சொல்லக்கூடும்!

கிருஷ்ணசாமி ஐயர் கூறிய வார்த்தைகளினின்றும், தென்னிந்திய நாடக மேடை அபிவித்தியடைய வேண்டுமென்று விரும்புவோரெல்லாம் அறிந்து கொள்ள வேண்டி