பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/457

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

நாடக மேடை நினைவுகள்


யது ஒன்றிருக்கிறது - அதாவது நாடகப் பாத்திரங்களை ஆக்டர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும் பொழுது, ஒவ்வொரு ஆக்டரும் நடிக்கவேண்டிய பாத்திரத்திற்குத் தக்க ரூபம் முதலியன உடையவனாயிருக்கிறானா என்ற பார்த்துக் கொள்ள வேண்டியதாம். இது தமிழ் நாடக அபிவிருத்திக்கு ஒரு முக்கியமான விஷயமாதலால் இதைப்பற்றிச் சற்று விவரிக்க விரும்புகிறேன். நான் கண்ணாரக் கண்ட சில ஆபாசங்களை இங்கெழுதுகிறேன். ஒரு நாடகக் கம்பெனியார் ஆடிய நாடகத்தில் ஒருவன் மன்மதனாக வேடம் பூண்டான்; முகத்தை நோக்குமளவில் அவனுக்கு ஹனுமார் வேஷம்தான் தக்கது என்று தோன்றும்படியிருந்தது; அதன் மீது அந்தக் கம்பெனியின் சூத்ரகாரை இவனுக்கு ஏன் இந்த வேஷம் கொடுத்தீர்களென்று கேட்க, இவன் மிகவும் நன்றாய்ப் பாடுவான் சார், என்று பதில் தெரிவித்தார்.

இன்னொரு சமயம் ஒரு நாடகக் கம்பெனி எனது மனோஹரன் நாடகத்தை நடத்தியபொழுது, விஜயாள் வேஷம் பூண்ட பெண், ஒன்றறைக் கண்ணுடையவளாயிருந்தாள்! இதைச் சாதாரண ஜனங்கள் “டப்ஸா கண்” என்று சொல்வார்கள். (தமிழ் வித்வான்கள் இப்பதத்தை நான் உபயோகித்ததற்காக மன்னிப்பார்களாக) இப்படிப் பட்ட கண்ணையுடைய ஆக்டெரஸ் மேடையின் மீதிருந்து “பிராணநாதா” என்ற அழைக்கும் அநேக சமயங்களில் மனோஹரனைப் பார்த்து அழைக்கிறாளா அல்லது ராஜப் பிரியனைப் பார்த்து அழைக்கிறாளா அல்லது சபையிலிருக்கும் யாரையாவது பார்த்து அழைக்கிறாளா என்று சந்தேகிக்க இடங்கொடுத்தது! இன்னொரு கம்பெனியில் நான் பார்த்த “விஜயாள்” பத்மாவதியைப் பார்க்கிலும் மூன்று பங்கு பெருத்த உடலையுடையவளாயிருந்தாள்! நான் சாதாரணமாகப் பரிஹாசமாக எழுத வேண்டுமென்று எழுதவில்லை. நான் கண்ட வாஸ்தவத்தை உண்மையில் எழுதவேண்டுமென்றே எழுதுகிறேன்; இவள் நடக்கும் பொழுது ஆப்பிரிக்கா தேசத்திலுள்ள ஹிப்பப்போடமஸ் நடப்பது போலிருந்தது! இப்படிப்பட்டவளுக்கு ஏன் இந்த விஜயாள் வேஷம் கொடுக்கப்பட்டது என்று விசாரிக்குமளவில் இவள்தான் இந்நாடக. கம்பெனியில் “அயன் ஸ்திரீ பார்ட்க்”