பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/471

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

456

நாடக மேடை நினைவுகள்


போய்ப் படுத்துக் கொண்டேன். அப்படி நான் படுத்தபடியே, அம்பட்டன் எனக்கு முக க்ஷவரம் செய்ய, பிறகு என் நண்பர் வெங்கடாசல ஐயர் அப்படியே எனக்கு முகத்தில் வர்ணம் தீட்டி, வேஷம் போட்டு வைத்தார்! இன்னும் ஈஸ்வரன் கிருபையால், நான் வேஷம் பூணத்தக்க காலம் சில வருஷங்கள்தான் இருக்கிறதென நினைக்கிறேன்; அது முடிவு பெறும் வரையில் இப்படிப்பட்ட சம்பவம் எனக்கு நேரிடாதிருக்குமென ஈசனைப் பிரார்த்திக்கிறேன். யாழ்ப்பாணத்தில், கொழும்புவிலிருந்து போல் ஜனங்கள் ஏராளமாக வருவது அசாத்தியம் என்பது போய், நான் நாடகசாலைக்குப் போய்ச் சேருமுன்னமே கொழும்பு டவுன் ஹாலைப் பார்க்கிலும் இரண்டு பங்கு பெரிதாய் நிர்மாணிக்கப்பட்ட அக்கொட்டகை நிரம்பியிருந்தது! அன்றைத்தினம் வசூல் 1000 ரூபாய்க்கு மேலாகியது என்று கேள்விப்பட்டேன். உட்கார இடமில்லாமல் அனேகர் பணம் கொடுத்தும் நின்று கொண்டிருந்தனர். இவ்வண்ணம் ஏராளமான ஜனங்கள் நாங்கள் ஆடுவதைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று அறிந்ததும் எனது நண்பர்கள் மிகவும் குதூஹலத்துடன் வெகு விமரிசையாக அந்நாடகத்தை நடித்தனர். சாதாரணமாக, இதையே ஜீவனமாகக் கொண்டு நாடகமாடும் ஆக்டர்களைத் தவிர்த்து, வினோதத்திற்காக ஆடும் அமெடூர்கள், நாடக வரும்படியைப்பற்றிக் கவனிக்க வேண்டிய நிமித்தியமில்லை. இதை நான் எனது நண்பர்களுக்குப் பன்முறை வற்புறுத்தியிருக்கிறேன். ஆயினும் எவ்வளவு கற்றறிந்தவர்களா யிருந்தபோதிலும், சபை நிறைய ஜனங்கள் கூடியிருக்கும்போது ஆக்டு செய் வது ஒருவிதம்தான்; ஜனங்களேயில்லாமல், பத்துப் பதினைந்து பெயர் உட்கார்ந்திருக்கும்பொழுது அவர்களுக்கு எதிரில் ஆக்டு செய்வது ஒருவிதம்தான். இம்மாதிரி புத்திமான்கள் வித்தியாசப்படுத்தக் கூடாது வாஸ்தவம்தான்; ஆயினும் மனித சுபாவத்தை யாரால் மாற்ற முடியும்?

நாடகமானது மிகவும் அழகாய் நடிக்கப்பட்டபோதிலும், அந்நாடக மேடையைப் போல் ஆபாசமான நாடக மேடையை நான் இதுவரையிலும் பார்த்ததுமில்லை; இனியும் பார்க்கப்போகிறது மில்லை யென்று நம்புகிறேன்! அதைச் சற்றிங்கு விவரிக்கின்றேன். இந்நாடகத்தில் முதற்