பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/473

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

458

நாடக மேடை நினைவுகள்


"அப்படியா சமாச்சாரம்! இதை ஏன் எனக்கு முன்பே தெரிவிக்கவில்லை?” என்று அப்பொழுதிருந்த தேகஸ்திதி யில் என்னாலியன்றவளவு உரக்கக் கூச்சலிட்டேன். அந்தச் சப்தத்தைக் கேட்டவுடன் சபையிலிருந்த கூச்சல் அடங்கிவிட்டது. நான் அரங்கத்தில் தோன்றியது முதல், அந்த இரண்டு காட்சிகளிலும் நடித்தது ஏதோ எனக்குக் கனவு கண்டது போலிருக்கிறது. முதற் காட்சியில் நான் நின்று கொண்டே பேச வேண்டும்; ஆயினும் அரங்கத்தில் தோன்றிய உடன் என் கால்கள் தள்ளாட ஆரம்பித்தன! வைத்தியர் என் உடம்பின் பலஹீனத்தைப் பற்றிக் கூறியதனுண்மையை அப்பொழுதுதான் அறிந்தேன்! உடனே சுபத்திரையின் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு, கடைசி வரையில் நான் பேச வேண்டியதையெல்லாம் உட்கார்ந்து கொண்டே பேசினேன்! இது தவறுதான். ஆயினும் நிற்க தேக சக்தியில்லாதவன் வேறு என்ன செய்யக்கூடும்?

இந் நாடகத்தில் அர்ஜுனன் வேஷம் ஆடுவதில் ஒரு முக்கியமான கட்டம் உண்டு; அதாவது சுபத்திரை தன்னை வசப்படுத்த வயிற்று நோயால் வருந்துவதுபோல் பாசாங்கு செய்தாள் என்று அர்ஜுனன் அறிந்தவுடன், அவள் பக்கம் திரும்பி, “சுபத்திரை!” என்று ஒரு வார்த்தை கூறுகிறான். இந்த வார்த்தையை வெறும் கோபத்துடனும் சொல்லக் கூடாது; வெறுங் காதலுடனும் சொல்லக்கூடாது; வெறும் வருத்தத்துடனும் சொல்லக்கூடாது. சுபத்திரை தன்னை மோசம் செய்தாளே என்னும் கோபம் கொஞ்சம் இருக்க வேண்டியதுதான்; அவ்வாறு தன்னை மோசம் செய்தவள் தன்னாருயிர்க் காதலி யென்பதையும் மறக்கக்கூடாது. எப்படியிருந்தபோதிலும் இதனால் பிறகு ஸ்ரீகிருஷ்ண பகவானுடன் போர் புரிய நேரிடுமே என்னும் துக்கத்தையும் காட்ட வேண்டும். இந்த மூன்று ரசங்களையும் அந்த ஒரு பதத்தை உச்சரிப்பதில் அடக்கி நடிக்கவேண்டும். நான் இதை எழுதியபோது இந்த ரஸப்பூர்த்தியை அறிந்தவனன்று; ஏதோ அப்படி எழுத வேண்டுமென்று தோன்றி எழுதி விட்டேன். முதன் முறை இந்நாடகத்தை சென்னையில் நான் - நடித்தபொழுது, “சுபத்திரை!” என்று நான் திரும்பி அவளைப் பார்த்தபொழுது, சபையார் கரகோஷம் செய்து