பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/476

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

461


குறிப்பதற்கு மிகவும் உபயோகப்பட்டு வருகிறது. நான்காவது, இவைகளைப் பற்றி, நான் எழுதிக்கொண்டு வரும் பொழுது, இந்த விருத்தாந்தங்களையெல்லாம் இப்பொழுது நான் மறுபடியும் அனுபவிப்பது போலிருக்கின்றதெனக்கு; மறந்துபோன சில விஷயங்கள் புதிதாய் ஞாபகத்திற்கு வருகின்றன. இதற்கு ஓர் உதாரணமாக அந்த யாழ்ப்பாணத்துப் பையன் என்னைக் கேட்ட கேள்வி ஞாபகத்திலில்லை; அன்று நாடக மேடையை விட்டு வீட்டிற்குப் போன சமாச்சாரத்தை எழுதும்பொழுதுதான் புதிதாய் ஞாபகம் வந்தது!

‘காலவ ரிஷி’ ஆடிய மறுநாள் வேறொன்றும் நாடகம் வைத்துக்கொள்ளவில்லை. சாதாரணமாக வெளியூர்களில் ஒன்று விட்டொருநாள்தான் நாடகம் வைத்துக்கொள்வது எங்கள் சபை வழக்கமாகையால், மறுநாள் எங்களுக்கு விடுமுறையாயிருந்தது. சபையின் அங்கத்தினரையெல்லாம் எங்கள் யாழ்ப்பாணத்துப் புதிய நண்பர்கள் ஏதோ ஓர் இடத்திற்கு வனபோஜன விருந்துக்காக அழைத்துக்கொண்டு போய்விட்டனர். எனதுயிர் நண்பர் மாத்திரம் என்னைப் பார்த்துக் கொள்வதற்காக, என்னுடன் தங்கியிருந்தனர். அன்று காலை சுமார் 9 மணிக்கு என்னைக் காண என் பழைய சிநேகிதர் மிஸ்டர் பின்டோ வந்து சேர்ந்தார். அவரை நான் கடைசியில் பார்த்து, சுமார் 20 வருடங்களாயினவென்பதை முன்பே குறித்திருக்கிறேன். இத்தனைக் காலம் பொறுத்து, நாங்கள் இருவரும் சந்திக்கவே, எங்களுக்குப் பரஸ்பரம் உண்டான சந்தோஷம் கொஞ்சம் அல்ல; இதை இப்படிப்பட்டது என்று சொல்ல நான் அசக்தனாயிருக்கிறேன்; இதை வாசிக்கும் நண்பர்கள் யாராவது, சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் ஒருவருடன் மிகவும் அன்யோன்யமாயிருந்து, பிறகு அந்த நண்பனை விட்டுப் பிரிந்து, 20 வருடங்கள் பாராதிருந்து பிறகு அகஸ்மாத்தாய் வேறொரு தேசத்தில் அவரைப் பார்க்கும்படி நேரிடுமாயின், அப்படிப் பட்டவர்களுக்குத்தான் எங்கள் மனோசந்துஷ்டி இப்படிப்பட்ட தென்று தோன்றும்.

ஒன்பது மணிக்குப் பேச ஆரம்பித்தவர்கள், காலங்கழி வதையும் கவனியாமல், சுமார் பதினோருமணி வரையில் பேசிக்கொண்டிருந்தோம், நாங்கள் கலாசாலையை விட்டுப்