பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/477

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

462

நாடக மேடை நினைவுகள்


பிரிந்தது முதல், ஒவ்வொருவருக்கும் நேர்ந்த விஷயங்களையெல்லாம் பற்றி! அவர் அப்பொழுது சொன்ன முக்கியமான விஷயம் ஒன்று எனக்கு இன்னும் நன்றாய் ஞாபகமிருக் கிறது. “சம்பந்தம்! நீ பூண்டிருந்த வேஷத்தில், நீ நாடக மேடைக்கு வந்த பிறகும், கொஞ்சநேரம் உன் முக ஜாடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை; ஆயினும், நீ மேடைக்கு வருமுன், ஏதோ பேசினாயே? அக்குரலைக் கேட்டவுடன், உன் பழைய ஞாபகம் வந்து, இன்னானெனக் கண்டு பிடித்து விட்டேன்! ஞாபகமிருக்கிறதா? நாம் கலாசாலையில் வாசித்த பொழுது உன் தமிழ் உபாத்தியாயர், தமிழ் வசனப் பாடங்களை யெல்லாம் உன்னைத்தான் உரக்கப் படிக்கச் சொல்வார்; அவருடைய மெல்லிய குரலும், உன்னுடைய கம்பீரமான குரலும் நான் மறக்கவில்லை; ஆகவே, உன் குரலைக் கேட்டவுடன் உன்னைக் கண்டுபிடித்து விட்டேன்” என்று சொல்லி நகைத்தார். பைபிளில் கிறிஸ்தவர்கள் சாதாரணமாக உச்சரிக்காத ஒரு பேர்வழி, என்ன வேடம் பூண்டாலும் பிளவையுடைய தன் காலை மாத்திரம் மறைக்க முடியாது என்று ஒரு கதை உண்டு; அம்மாதிரியாக, நான் எந்த வேஷம் பூண்டாலும் என்னை அறிந்த நண்பர்கள், என் குரலினால் என்னை எப்படியாவது கண்டுபிடித்து விடுகிறார்கள்!

அன்றைத் தினம் சாயங்காலம் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு என்னுடன் பேசிக்கொண்டிருந்பொழுது, “உங்களுக்கு உடம்புதான் கொஞ்சம் சுமாராக இருக்கிறதே; எந்நேரமும் படுக்கையிலேயே படுத்திருந்தால் நல்லதல்ல; கொஞ்சம் உலாவினால் நல்லது; நாங்கள் எல்லாம் தங்கியிருக்கும் புதிய வீடு, அருகாமையில்தானிருக்கிறது. அங்கே நடந்து போவோம் வாருங்கள்” என்று சொல்ல, அதற்கு நானிசைந்தேன்.

ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டு, அங்கு மெல்ல நான் அவருடன் நடந்துபோக, வீதியில் புறப்பட்டவுடன் யாரோ இரண்டு யாழ்ப்பாணத்துவாசிகள் எங்களைப் பின் தொடர்ந்தனர்; இதை யாரோ வீதியிற் போகிறவர்கள் என்று நாங்கள் அவ்வளவாகக் கவனிக்கவில்லை; பிறகு சபை தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த பொழுது, அவர்களும் எங்களுடன் நுழையவே, இவர்கள் யாரென்று