பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/479

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

464

நாடக மேடை நினைவுகள்


முயன்றேன். ஆயினும், புறாவிடுகிற காட்சியில், முற்றிலும் நின்று கொண்டே பேச வேண்டியவன், பலஹீனத்தினால் நிற்க முடியாமல், ஒரு நாற்காலியை மேடை மீது போடச்சொல்லி, அதில் உட்கார்ந்து கொண்டே பேசவேண்டியதாயிற்று. அப்பொழுது இப்படி நேர்ந்ததே என்று நான் என் மனத்திற்குள் பட்ட வருத்தம் கொஞ்சம் அல்ல. இதை வாசிக்கும் எனது நண்பர்களாகிய ஆக்டர்கள், நாடக மேடையில் தாங்கள் நடிக்க வேண்டும் என்னும் எண்ணம் தங்களை விட்டு அகலும் வரையில், முக்கியமாகத் தங்கள் தேகத்தை நோய் நொடி வராதபடி காப்பாற்றிக் கொள்வார்களாக. ஒருவன் எவ்வளவுதான் கெட்டிகாரனான ஆக்டராயிருந்த போதிலும், உடம்பு அசௌக்கியமாயிருந்தால் அவனால் என்ன செய்யக்கூடும்?

உடனே மறுநாள், ராத்திரி நாடகம் வைத்துக் கொள்ள முடியாதென்று சொல்லி, சாயங்காலம் 51/2 மணிக்கு ஆரம்பித்து 81/2 மணிக்குள்ளாக முடிக்கத்தக்க சிறு நாடக மாகிய “நற்குல தெய்வம்” என்பதை வைத்துக்கொண்டோம். இது ஒரு சிறு நாடகமாகையாலும், இதில் எனக்கு அதிக பாகமில்லாத படியாலும், அதிகக் கஷ்டமில்லாமல் இதில ஆடி முடித்தேன். நாடகம் ஆனதும், எங்கள் சபை மங்களம் பாடுமுன் அரங்கத்தின் முன் வந்து நான் யாழ்ப்பாணத்துவாசிகள் எங்கள் சபைக்குச் செய்த எல்லா உதவிக்காகவும் எங்கள் சபையின் வந்தனத்தைச் செலுத்திவிட்டு, வீடு போய்ச் சேர்ந்து, யாழ்ப்பாணத்தில் அடியெடுத்து வைத்தபோது, நாம் இங்கு ஒரு நாடகமாவது ஆடப்போகிறோமா என்று திகிலடைந்த நான், மூன்று நாடகங்களை யாழ்ப்பாணர்கள் மனமகிழ முடிக்கச் செய்த ஈசன் பேரருளைப் போற்றிவிட்டு உறங்கினேன்.

மறுநாள் காலை, நாடகமாடிய இளைப்பினால் அயர்ந்து நித்திரை செய்து, கொஞ்சம் நேரம் பொறுத்துக் கண் விழித்த நான், என் படுக்கையைச் சுற்றில் யாழ்ப்பாணத்துப் பெரிய மனிதர்கள் நான்கைந்து பெயரும், வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், ரங்கவடிவேலு முதலிய சபையின் நிர்வாக சபை அங்கத்தினரும் உட்டார்ந்திருக்கக் கண்டேன். நான் அதிகமாகத் தூங்கினதற்கு அவர்கள் மன்னிப்பைக் கேட்டுவிட்டு, ‘என்ன விசேஷம்?’ என்று நான் அவர்களை