பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/480

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

465


வினவ, யாழ்ப்பாணவாசிகளில் ஒருவர் (அவர் முத்துக்குமரு முதலியார் என்று நினைக்கிறேன்) “நாங்கள் எல்லாம் உங்களுக்குக் கொஞ்சம் கஷ்டம் கொடுக்க வந்திருக்கிறோம். யாழ்ப்பாணத்துக் கலாசாலைக்காகவும் யாழ்ப்பாணத்துத் தேகப்பயிற்சி சபைக்காகவும், சுகுண விலாச சபை ஒரு நாடகம் போட்டு, அதன் வரும்படியை உதவ வேண்டுமென்று உங்கள் சபையாரைக் காலை கேட்டோம். அவர்களெல்லாம் நீங்கள் சம்மதித்தால் வேறு ஆட்சேபணையில்லையென்று சொல்லுகிறார்கள். ஆகவே, உங்களால் தானிருக்கிறது. நீங்கள் ஆம் என்றால் நிறைவேறிவிடும்; என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். அதன்பேரில், ‘இதென்னடா இது; கஷ்டமெல்லாம் தீர்ந்தது என்றிருந்தோமே, இது ஒன்று இப்பொழுது வந்து முளைத்ததே!’ என்று எண்ணினவனாய், என்றைக்கு நாடகம் போடுகிறது என்று கேட்க, இன்று சாயங்காலம் என்று பதில் உரைத்தார்கள்; அப்பொழுது ஏறக்குறைய எட்டரை அல்லது ஒன்பது மணியிருக்கும்; இன்றிரவு நாடகம் வைத்துக் கொண்டால், சாயங்காலத்திற்குள்ளாக எப்படி நாடக விளம்பரம் முதலியன வெளியாவது, ஜனங்களுக்கெல்லாம் எப்படித் தெரிவது? என்று ஆட்சேபித்துப் பார்த்தேன். (வாஸ்வத்தில் என் தேக ஸ்திதியைக் கருதினவனாய், எப்படியாவது இதனின்றும் தப்பித்துக் கொள்ள வேண்டு மென்பதே என் கருத்தாயிருந்தது.) அதற்கு அவர்கள் “அந்தச் சமாச்சாரங்களைப் பற்றி உங்களுக்குக் கவலையேன்? அதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அது எங்கள் பொறுப்பு. அவற்றைப்பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம். நாடகமாடுவதாக நீங்கள் சம்மதியுங்கள்!” என்று வற்புறுத்தினார்கள். அதன்பேரில் இவ்வளவு பலவந்திக்கிறார்களே நமது நண்பர்கள் என்று சற்று இணங்கினவனாய், என்ன நாடகம் போடுவது என்று கேட்டேன். அதன் பேரில் “‘லீலாவதி - சுலோசனா’ உங்கள் சபை நாடகங்களில் ஒரு மிகச் சிறந்தது என்று கேள்விப் பட்டிருக்கிறோம்; அதில் உங்களுக்கு மனோஹரன் நாடகத்தைப் போல் அதிகச் சிரமமில்லையென்று கேள்விப்படுகிறோம். ஆகவே அதைப் போடச் சம்மதிக்க வேண்டும். உங்கள் சபையின் மற்ற ஆக்டர்களெல்லாம் ஒப்புக்