பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/483

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

468

நாடக மேடை நினைவுகள் எங்கள்


சபைக்கு அன்று செய்த கௌரவமானது என்றும் மறக்கற்பாலதன்று.

நாடகம் 9 மணிக்கு ஆரம்பித்தபோது, கொட்டகைக்குள் ‘எள்ளு போட்டால் கீழே விழாது’ என்னும் பழமொழிக் கிசைய, ஜனங்கள் நிறைந்திருந்தனர். நாடக ஆரம்பம் முதல் கடைசிவரை, மிகவும் கவனமாய் நாடகத்தைக் கவனித்து வந்தனர். எனது ஆக்டர்களுக்கு முன்னதாகவே, யாழ்ப்பாண வாசிகள் தமிழில் தேர்ந்தவர்கள். ஆகவே, சரியாகப் பாடம் படித்து வையுங்கள், ஏதாவது “கைசரக்குப் போட்டீர்களானால் கண்டுபிடித்து விடுவார்கள்” என்று சொல்லியிருந்தேன்; அதன்படியே அவர்களும் தங்கள் தங்கள் பாடங்களைச் சரியாகப் படித்து அன்றிரவு வெகு விமரிசையாய் நடித்தார்கள். நாடகம் முடிவதற்குக் காலை 21/2 மணியான போதிலும் ஒருவரும் கொட்டகையை விட்டு அகலவில்லை. நாடகத்தின் கடைசிக்காட்சிக்கு முன்பாக, எனது நண்பர், யாழ்ப்பாணத்து ஜட்ஜ் மிஸ்டர் பின்டோ என்பவர் (இப்பொழுது இவர் பெயரை மிஸ்டர் சிரேஷ்டா என்று மாற்றிக் கொண்டார்), மேடையின் பேரில் வந்து சபையைச் சிலாகித்துப் பேசி, யாழ்ப்பாணத்து வாசிகள் தரப்பில் எங்கள் சபைக்கு ஞாபகார்த்தமாக சுமார் 400 ரூபாய் பெறும்படியான வெள்ளித் தட்டு’ சந்தனக்கிண்ணம், பன்னீர்சொம்பு கொடுத்தார் (இவைகள் இன்னும் எங்கள் சபையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன). இன்னும் இரண்டொரு பெரிய மனிதர்களும் சபையின் நாடகங்களைப்பற்றிப் புகழ்ந்து பேசினர் என்பது என் ஞாபகம்.

யாழ்ப்பாணத்தில் எங்கள் சபையார் ஆடிய நாடகங்கள் யாழ்ப்பாணவாசிகளின் மனத்தை எவ்வாறு கவர்ந்ததென்பதற்கு, அச்சமயம், ஒரு சிங்களத்து வர்த்தமானப் பத்திரிகையில் எழுதிய ஒரு வியாசத்தினின்றும் சில பாகங்களை இங்குத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன். சாதாரணமாகப் பத்திரிகைகளில் ஒரு நாடகத்தைப்பற்றி, நாடகமாடுபவர்களின் நண்பர்கள் எவ்வளவு அதிகப்படுத்தி எழுதுகிறார்கள் என்பதை நான் அறிந்துள்ளேன். அன்றியும் சிலர் தாங்கள் நடித்ததைப்பற்றித் தாங்களே பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவதும் எனக்குத் தெரியும். ஆயினும் இப்பொழுது நான் மொழி பெயர்க்கப் போகிற விஷயங்