பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/484

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

469


களை எழுதியவர் பெயரும் எனக்குத் தெரியாது. இப்பத்திரிகையும் சில நாட்கள் பொறுத்து எனக்கு அகஸ்மாத்தாய்க் கிடைத்தது; யாழ்ப்பாணத்தில் நல்லூர் என்னும் கிராமத்திலிருப்பவராகத் தன்னை இவ்வியாசத்தில் வெளியிட்டிருக்கிறார். இவர் எங்கள் சபையின் நாடகங்களைப்பற்றி எழுதிய சில பாகங்களைக் கீழே தெரிவிக்கிறேன்.

“(யாழ்ப்பாணத்து) மைதானத்தில் யாழ்ப்பாணம் முழுவதும் திரண்டுபோய்ச் சேர்ந்தது என்று வாஸ்தவமாய்க் கூற வேண்டும்.” இச்சபையின் ஆக்டர்கள் எங்கள் மனத்தைக் கவர்ந்தது மிகுந்த ஆச்சரியகரமான விஷயம். “யாழ்ப்பாணத்தார் மிஸ்டர் சம்பந்தத்தின் பெயரை மறந்து போகலாம். ஒருக்கால் அவரது குரலின் பிரதித் தொனி, மழுங்கிப் போகலாம்; அவர் உருவத்தைச் சுற்றியிருக்கும் தெய்வீகம் பொருந்திய காந்தி மறைந்து போகலாம். காலம் என்பதே அற்றுப் போகும் வரையில், அவர் தமிழ் பாஷையிலுள்ள அழகினையும் பெருமையையும் பூமியில் புதைந்து கிடந்த நிதியை வெளிப்படுத்தியது போல், அவர் வெளிப்படுத்தியது அழியாது நிற்கும்!”

பிறகு நான் நான்கு நாடகங்களிலும் நடித்ததைப்பற்றி ஏதோ புகழ்ந்து கூறியுள்ளார். அதை இங்கு எழுத எனக்கிஷ்டமில்லை. ஆயினும் அவர் எனதுயிர் நண்பனான சி. ரங்கவடிவேலுவைப்பற்றி எழுதியதை மாத்திரம் இங்கு மொழி பெயர்க்க, இதை வாசிக்கும் எனது நண்பர்களின் அனுமதியைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

“எல்லா ஆக்டர்களைவிட முதன்மை மிஸ்டர் ரங்கவடி வேலுக்குக் கொடுக்க வேண்டும். இந்நாடகங்களிலெல்லாம் இவர் முக்கியமான ஸ்திரீ பாகம் தரித்து, சபையோரின் மனத்தையெல்லாம் மிகவும் கவர்ந்தனர். இவர் ஊர்வசி வேடம் பூண்டு என்ன அழகாயும் அருமையாகவும் நடனம் செய்தார்! யவ்வன அழகிய அதரமுடையவர்! அவர் புன்னகை புரியும் போது நம்முடைய மனத்தையெல்லாம் எவ்வாறு கவருகிறார்! அழகிய சாரியணிந்து பெண் கோலத்துடன், சித்ராங்கியாகவும், சுலோசனையாகவும், சாரங்கதரனுடனும் ஸ்ரீதத்தனுடனும் அவர் பேசுங்கால் இவர் வாஸ்தவத்தில் ஸ்திரீ ஜன்மம் எடுத்தவரே என்று யார்தான்