பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/485

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

470

நாடக மேடை நினைவுகள் எங்கள்


எண்ணமாட்டார்கள்! அவரது அபிநயங்களெல்லாம் எவ்வளவு பொருத்தமானதாயிருக்கின்றன! சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி தன் மனோபாவங்களைக் காட்டுகிறார்! வாஸ்தவமாய் இவர் எல்லாருடைய மதியையும் மயங்கச் செய்தார் என்பது திண்ணம்! இவரை நாடகமேடையிற் பார்த்த பிறகு, மாத்யு ஆர்னால்டு என்பவர், தன் சிறுவயதில், எடின்பரோ நாடக சாலையில் ஒரு முறை ராஷில் என்னும் நடிக சிரோன்மணியைப் பார்த்துவிட்டு, அவளை இரண்டு மாதம் வரையில் பாரிஸ் நகரத்தில் பின் தொடர்ந்தார் என்று கேள்விப்படுவது ஓர் ஆச்சரியமாகாது!”

இவர் இந்த வியாசத்தை அடியிற்கண்ட வார்த்தைகளுடன் பூர்த்தி செய்கிறார். “இவ்வழகிய நாடக சபையார், நம்முடைய மனத்தையெல்லாம் கவர்ந்துவிட்டு, நம்மைவிட்டுச் சென்னை போய்ச் சேர்ந்துவிட்டனர். போகும் போது நமக்கு நன்கொடையாக என்ன அளித்துச் சென்றனர்? இவர்கள் அரங்கத்தின்மீது ஆடியதனால் நாம் அறிந்த புத்திமதி என்ன? அவர்கள் போன பிறகு, மைதானத்தின் பக்கம் நான் போய் அவர்கள் ஆடிய நாடகக் கொட்டகையிருந்த இடத்தைப் பார்க்குங்கால், என் மனத்தின்கண் இரண்டு உருவங்கள் தோன்றுகின்றன. ஒன்று-மிகுந்த அழகுடைய முகச் சன்னங்கள் உடையதும், கருமேகம் போன்ற கேசம் நிறைந்ததும், பட்டுப் புடைவை அணிந்து பல விலையுயர்ந்த ஆபரணங்களணிந்ததாம்! - மற்றொன்று சௌம்யமாயிருந்தபோதிலும் திடசித்தத்தைக் குறிக்கின்ற முகத்தையுடையது. சி.ரங்கவடிவேலு, ப. சம்பந்தன் ஆகிய இவர்களுடைய இனிய குரலானது எனக்கு என்ன சொல்லுகிறதென்றால் “நாடக மேடையானது எல்லாவற்றையும் வெல்லும் சக்தியுடையது; யாழ்ப்பாணத்தில் உடனே ஒரு நாடக சபையை ஏற்படுத்துங்கள் என்பதேயாம்.”

பிறகு மறுநாள் காலையில் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் நானும் கொழும்புக்குப் புறப்பட்டோம். சபையின் மற்ற அங்கத்தினர் அன்று யாழ்ப்பாணததில் தங்கியிருந்து மறுநாள் புறப்பட்டு வருவதாகச் சொன்னார்கள். என் உடம்பு அசௌகர்யத்தைப்பற்றி நான ஒரு நாள் முன்னதாகப் புறப்பட்டு, கொழும்பில் ஒரு நாள்