பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/487

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

472

நாடக மேடை நினைவுகள் எங்கள்


எழுதியனுப்பும் எல்லோருடைய மதிப்புரையைவிட, இவர் மதிப்புரைக்கே நான் அதிக கௌரவம் பாராட்டுகிறேன்; ஏனெனில், மற்றவர்களைப் போலல்லாது ஏதாவது குற்றம் குறையிருந்தால் எனக்கு அவற்றை உடனே எடுத்துக்காட்டும் அபூர்வமான சிறந்த குணம், திருநாவுக்கரசு என்னும் சரியான பெயர் பெற்ற இம்மாதரசியிடம் உண்டு.

இம்முறை இலங்கைக்குச் சபை போய் வந்ததன் பலனாக, ரூபாய் 1500 கட்டட பண்டுக்குச் சேர்க்கப்பட்டது. அன்றியும் அதன் நேர்பலனாகக் கொழும்பில், சுபோத் விலாச சபையென்ற நாடக சபையொன்று ஸ்தாபிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலும் பிறகு ஒரு நாடக சபை ஏற்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். கொழும்பு சபை பல நாடகங்கள் ஆடி இன்னும் ஜீவித்திருக்கிறதென அறிவேன்; யாழ்ப்பாணத்து சபையைப் பற்றி நான் கேள்விப்பட்டு சில வருஷங்களாயது.

22ஆவது அத்தியாயம்

1913ஆம் வருஷம் எங்கள் சபையின் வர்த்தமானத்தில் குறிக்க வேண்டியது எனக்கு ஞாபகமிருக்கிற வரையில், இரண்டு விஷயங்களே; ஒன்று சீமையிலிருந்து வந்த ராயல் கமிஷனுக்கு ஆனரபில் பி.எஸ். சிவஸ்வாமி ஐயர் தன் வீட்டில் ஒரு விருந்தளித்தபொழுது, அவரது வேண்டு கோளின்படி, அச்சமயம் எங்கள் சபையார் “இந்திய தேசத்தின் சரித்திரம்” பல தோற்றக் காட்சிகளாகக் காட்டியது; மற்றொன்று-காலஞ்சென்ற வி. கிருஷ்ணசாமி ஐயருடைய உருவப்படத்தை, சென்னை கவர்னர் லார்ட் பென்ட் லென்ட் திறந்து வைத்தது.

இவ் வருஷம் நான் இரண்டு சிறு நாடகங்களைப் புதிதாய் எழுதினேன். ஒன்று, ‘கோனேரி அரசகுமாரன்’ என்பது; மற்றொன்று, ‘சிறுத்தொண்டர் சரித்திரம்.’ கோனேரி அரசகுமாரன் என்பது, ஷேக்ஸ்பியர் மகாகவி ஆங்கிலத்தில் எழுதிய ‘நான்காம் ஹென்றி’ என்னும் நாடகத்திலிருந்து ஒரு