பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/489

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

474

நாடக மேடை நினைவுகள் எங்கள்


நான் இங்குத் தற்புகழ்ச்சியாக எடுத்து எழுதவில்லை. அச்சீமானது பேரன் எனது நண்பர்கள் அறியும் பொருட்டே இங்கு எழுதினேன். புகழ்ந்தது மன்றி, “இதென்ன சம்பந்தம்? இப்படிப்பட்ட பக்தி ரசமமைந்த நாடகத்தை ஆண் மக்களாகிய அங்கத்தினர் பார்க்க இடமில்லாமற் போயிற்றே. இதை மறுதினம் நாங்களெல்லாம் பார்க்க ஆடவேண்டு” மென்று கூறி, காரியதரிசிகளிடம் பேசி, மறுநாள் வேறு ஏதோ நாடகம் வைத்திருந்ததை மாற்றி இதையே போடச் செய்தார்!

மறுநாள் எனது நண்பர்களெல்லாம் இதைப் பார்த்த பொழுது, மிகவும் நன்றாயிருக்கிறது, இதைக் கொஞ்சம் பெரியதாக எழுதி, அங்கத்தினர் மாத்திரமின்றி, அயலாரும் பார்க்கும்படியாக, பிரவேசக் கட்டணமுடைய நாடகமாக ஆட வேண்டுமென்று வற்புறுத்தினர். பிறகு அதனுடன் ஒரு ஹாஸ்ய ரசமமைந்த இடைக்காட்சியும், இன்னும் இரண்டு சிறு காட்சிகளும் சேர்த்து எழுதி அச்சிட்டேன். இதில் வெண்காட்டு நங்கையாக நடித்த எனதுயிர் நண்பர், சாதாரணமாக விலையுயர்ந்த சரிகைச் சேலைகளையும் ரவையிழைத்த நகைகளையுமே அணிய விரும்புபவர்; குரநாட்டுச் சேலையொன்றை அணிந்து, தன் கூந்தலைச் சொருகிக் கொண்டையாகப் போட்டுக் கொண்டு தோன்றியது, எனக்கு இப்பொழுதும் பிரத்யட்சமாகப் பார்ப்பதுபோல் என் மனத்தின்கண் தோன்றுகிறது. இதை இங்கெடுத்து எழுதியதற்கு இன்னொரு முக்கியக்காரணமுண்டு. அதாவது அந்நாடகப் பாத்திரம் எப்படி உடை தரிக்க வேண்டுமென்பதை என் இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே. சில சபைகளில் இப்பாத்திரத்தைப் பூணும் ஆக்டர், விலையுயர்ந்த சம்கி புடைவையைக் கட்டிக் கொண்டு, ரவைசெட் நகைகளெல்லாம் அணிந்து கொண்டு, பிச்சாடாவாவது பின்னலாவது போட்டுக் கொண்டு தோன்றுவதைப் பார்த்திருக்கிறேன். அது முற்றிலும் தவறாகும். வெண்காட்டு நங்கை தெற்கத்திய ஸ்திரீ; தன் பொருளையெல்லாம் அடியார்க்கு அமுதளிப்பதில் செலவிட்ட ஒரு பக்தருடைய மனைவி. அதற்கேற்றபடி நடையுடை பாவனைகள் இருக்க வேண்டும் என்பது திண்ணம். அன்றியும் முக்கியமாக சேலை தரிப்பதிலும்