பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/493

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

478

நாடக மேடை நினைவுகள்


அறிந்திலர் அச்சமயம்! சில வருஷங்களுக்குப் பிறகு இதெல்லாம் மாறிவிட்டது.

இரவில் போலீஸ் பந்தோபஸ்துடன் நாங்கள் வீட்டிற்குச் செல்வதைக் கண்ட ஜனங்கள், இதனின்றும் இன்னொரு தவறான ஊகை கொண்டனர். எனதுயிர் நண்பர் ரங்கவடி வேலு முதலிய ஆக்டர்கள் அணிந்திருந்த நகைகளெல்லாம் மிகவும் விலையுயர்ந்தன, இந்நகைகளின் பந்தோபஸ்துக் காக போலீஸ் கான்ஸ்டபிள்கள் கூடப்போகிறார்கள் என்று பேசத் தொடங்கினர். என்னுடன் இதைப்பற்றிப் பேசிய இரண்டொருவருக்கு அந்நகைகளெல்லாம், வெள்ளைக் கற்களாலும் பித்தளையினாலும் ஆனவை என்று நான் கூறியபோதிலும், இப்படிச் சொன்னால்தான் அவற்றை யாரும் களவாடமாட்டார்கள் என்னும் காரணத்தினால் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று மறுத்தனர்! இந்தத் தர்ம சங்கடத்திற்கு நான் என்ன செய்வது? உலக வழக்க மீதாகும்! பணக்காரன் பித்தளையை அணிந்திருந்தால் அது பொன்னாக மதிக்கப்படுகிறது; ஏழை வாஸ்தவமாகப் பொன்னை அணிந்திருந்தாலும் அது பித்தளை என மதிக்கப்படுகிறது!

எங்கள் முதல் நாடகமானது இந்தச் சிறு ஊரில் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணினதென்றே சொல்லவேண்டும்; பாலசுப்பிரமணிய ஐயர் எனக்குத் தெரிவித்தபடி, ஊரில் எங்கே போனாலும் சுகுண விலாச சபை பேச்சாகவிருந்தது எனக்கு முக்கியமாக திருப்தியைத் தந்தது. கற்றறிந்தவர்கள் எங்கள் சபையின் நாடகத்தைப் புகழ்ந்ததன்று; சாதாரண ஜனங்கள், அதாவது கடைசி வகுப்பு டிக்கட்டு வாங்கிக் கொண்டு வந்து பார்த்த ஜனங்கள்கூடச் சந்தோஷப்பட்டனர் என்பதேயாம். இதை நான் அறிந்த விதத்தை இங்கு எழுதுகிறேன். எந்த ஊருக்குச் சென்றாலும் நாடகமானவுடன் மறுநாள் எங்கள் சபை ஸ்டேஜ் அசிஸ்டெண்டாகிய கேசு (கேசவ முதலியார்) அந்த ஊரிலுள்ள பிரபலமான காப்பி ஹோட்டல்களுக்கெல்லாம் மெல்லப் போய்ச் சுற்றிவிட்டு வருவான். அங்கு ஜனங்கள் சபையைப்பற்றி ஏதாவது பேசிக்கொண்டிருந்தால் அதை யெல்லாம் எனக்குத் தெரிவிப்பான்; இந்தப் “பரதேசித் தபால்” மூலமாகச் சாதாரண ஜனங்களின் அபிப்பிராயத்தை நான் அறிவது வழக்கம். இதன்படி கேசு மறுநாள் எனக்குத் தெரிவித்ததாவது: “காபி