பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

479


ஹோட்டல்களில் சபைப் பேச்சு தவிர வேறு பேச்சு கிடையாது! இரண்டாவது நாடகத்திற்கும் நீங்கள் அதிக டிக்கட்டுகள் அச்சடிக்க வேண்டியதுதான். நாயினா கண்ணுவைப் பற்றியும் (நாயினாகண்ணு என்பது ரங்கவடி வேலுவின் வீட்டுச் செல்லப் பெயர்) பத்மநாபராவைப் பற்றியும் பேசாத பெயர்களில்லை” என்பதேயாம். என்னுடைய ஆக்டிங்கைப்பற்றிப் புகழ்ந்ததாகவும், ஆயினும் இவர் ஏன் பாடுகிறதில்லை என்று அநேகம் பெயர் கேட்டதாயும் தெரிவித்தான். அன்றியும், சில சாப்பாட்டு ஹோட்டல்களில், இனி சுகுண விலாச சபை நாடக தினங்களில் இரவில் ஏழு மணிக்கெல்லாம் சாப்பாடு போட்டாய்விட வேண்டியது என்று ஏற்பாடு செய்துகொண்ட தாகவும் தெரிவித்தான்.

இவ்வூரில் நாங்கள் நடத்திய இரண்டாவது நாடகம் லீலாவதி- சுலோசனா; அதற்காக அ. கிருஷ்ணசாமி ஐயரை, சென்னையிலிருந்து லீலாவதி வேஷத்திற்காக வரவழைத்தோம். டிக்கட்டுகள் அதிகமாக அச்சிட்டு, எல்லா ஏற்பாடுகள் செய்தும், நாடக ஆரம்பத்திற்கு அரைமணி முன்னதாக, டிக்கட்டுகள் போதாமற்போயின; கொட்டகையிலும் நிற்க இடமில்லாமற் போயிற்று. இந்நாடகத்தில் கிருஷ்ணசாமி ஐயருடைய பாட்டும், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவின் ஆக்டும் மிகவும் கொண்டாடப்பட்டன.

இங்கு நடத்திய கடைசி நாடகம் “சாரங்கதரன்.” நாடக தினத்தின் காலையிலேயே சிலர் முப்பது நாற்பது டிக்கட்டுகள் வாங்க ஆரம்பித்தனர். இதற்குக் காரணம் என்னவென்று பிறகுதான் அறிந்தேன். முதல் இரண்டு நாடகங்களுக்குக் டிக்கட்டுகள் ஆய்விட்ட படியால் காலையிலே இவைகளை வாங்கி, பிறகு சாயங்காலம் அவைகளை ஒன்றுக்கு இரண்டு விலையாக விற்று லாபம் சம்பாதித்தார்களாம்! சாயங்காலம் எங்கள் வழக்கம்போல் ரங்கவடிவேலும் நானும் 5½ மணிக்கு நாடகக் கொட்டகைக்குப் போக, டிக்கட்டு ஆபீசுக்கு எதிரில் வழக்கம்போல் மேளம் வாசிக்கும் வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களை உறையில் போட்டுக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இதற்குக் காரணம் என்னவென்று என் தமயனார் ஆறுமுக முதலியாரை வினவ, அவர்