பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/496

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

481


வெற்றியினால் எவ்வளவு மனோசந்துஷ்டியிருக்குமோ, அவ்வளவு மனோ சந்துஷ்டியுடையவனாயிருந்தேன் சர்வேஸ்வரன் கிருபையால்.

இந்த இரண்டு ஊர்களுக்கும் எங்கள் சபை சென்று நாடகமாடியதற்கு இன்னொரு பலன் கிடைத்தது. பெங்களூருக்குப் போய்வந்த பிறகு எப்படி அவ்விடம் ஒரு நாடக சபை ஏற்படுத்தப்பட்டதோ, கொழும்புக்குப் போய் வந்த பிறகு கொழும்பில் சுபோத விலாச சபையென்னும் நாடக சபை எப்படி அங்கு ஸ்தாபிக்கப்பட்டதோ, அம்மாதிரியாகவே, திருச்சிராப்பள்ளியில் “ரசிக ரஞ்சனி சபை” என்றும், கும்பகோணத்தில் “வாணி விலாச சபை” யென்றும் ஸ்தாபிக்கப்பட்டன. இவ்விரண்டு சபைகளும் நாளது வரையில் வளர்ந்து வருகின்றன.

இந்த 1914ஆம் வருஷம் ஐரோப்பிய மஹாயுத்தம் ஆரம் பித்த விஷயம் எல்லோரும் அறிந்ததே. அதன் பொருட்டுச் சென்னையில் வார் ரிலீப் பண்டு ஏற்படுத்திய பொழுது, அதற்காக எங்கள் சபையார் ரூபாய் 1000 நன்கொடையாகக் கொடுத்தனர். அன்றியும் பெல்ஜியம் தேசத்து உதவி பண்டுக்காக, தசராக் கொண்டாட்டத்தில், பத்து நாளும் யாசகம் செய்து, சுமார் ரூபாய் 250 அனுப்பினோம்.

மேலும் இவ்வருஷத்தின் கடைசியில் “தென் இந்தியா ஆர்ட்ஸ் (கலைகள்) எக்சிபிஷன்” ஒன்று சபையில் நடத்தினோம். அதற்கு மாட்சிமை தங்கிய கவர்னர் அவர்கள் ஒரு தினம் வந்திருந்தார்; மிகவும் நன்றாயிருக்கிறதெனப் புகழ்ந்து பேசினார்.

இவ் வருஷத்தின் கடைசியில் கிறிஸ்ட்மஸ் விடுமுறையில் மொத்தமாக நாற்பது நாட்களுக்கு விக்டோரியா பப்ளிக் ஹால் மேல் மாடியை வாடகைக்கு வாங்கிக்கொண்டு தமிழிலும் தெலுங்கிலும் அநேக நாடகங்கள் நடத்தினோம். அதன் மூலமாக செலவு போக, லாபத்தில் ரூ.1500, கட்டட பண்டுக்குச் சேர்த்தோம்.

இவ்வருஷம் நான் புதியதாக, “ரஜபுத்ர வீரன்” என்னும் ஒரு சிறு நாடகத்தை எழுதினேன். இதை எழுதும்படி நேரிட்ட காரணம் வருமாறு: கணம் பி.ஆர்.சுந்தர ஐயர்