பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/497

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

482

நாடக மேடை நினைவுகள்


காலமான பிறகு, அவருக்குப் பதிலாக ஹைகோர்ட் ஜட்ஜாகிய டி.வி. சேஷகிரி ஐயர் அவர்கள் எங்கள் சபைக்கு பிரசிடென்ட் ஆனார். சேஷகிரி ஐயர் அவர்கள் தசராக் கொண்டாட்டத்தின் கடைசி நாள் செலவையெல்லாம் ஒப்புக்கொண்டு, இவ்வருஷ முதல் தன் மரணகாலம் வரையில், அதை நடத்தி வந்தார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அத்தினம்தான் அவர் பிறந்த தினம். இக் கொண்டாட்டத்திற்காக, தன்னுடைய சினேகிதர்களாகிய ஐகோர்ட் ஜட்ஜுக்களை யெல்லாம் வரவழைக்கப் போகிறதாகக் கூறி, என்னை அவர்களுக்காக ஒரு புதிய நாடகம் நடத்தவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். நான் உடனே யோசித்து, பட்டணமெங்கும் ஐரோப்பாவில் நடக்கும் பெரும் யுத்தத்தைப்பற்றியே பேச்சாயிருப்பதால், யுத்த வீரர்களைப்பற்றிய கதையாயிருக்க வேண்டும் என்று தீர்மானித்து, டாட் என்பவர் ராஜஸ்தானத்துச் சரிதையில் எழுதியிருக்கும் சில சந்தர்ப்பங்களை ஒருங்கு சேர்த்து, ‘ரஜபுத்ரவீரன்’ என்னும் இந்நாடகத்தை விரைவில் எழுதி முடித்தேன். ஆயினும் இது உண்மையில் நடந்த சரித்திரமன்று. இந்நாடகத்தில் நேரிட்டதாயினும், ஏக காலத்தில் ஒன்றாய் இவைகள் சம்பவித்தவைகள் அல்ல; கதாநாயகனான ரணவீர்சிங் என் மனத்தால் நிர்மாணிக்கப் பட்ட பாத்திரமே. இந்நாடகத்தின் கடைசிக் காட்சியை நாடக தினத்தின் காலைதான் எழுதி முடித்தேன். ஆயினும் எனது ஆக்டர்களெல்லாம் நன்றாகப் படித்துத் தங்கள் பாத்திரங்களை மிகவும் அருமையாக நடித்தனர். நான் ரணவீர்சிங்காகவும், ரங்கவடிவேலு என் மனைவியாகிய சந்திராபாயாகவும் நடித்தோம். ஆயினும் வயோதிகத்தினால் கண் குருடாகிய ஜனாவாலாபாய் என்னும் ரணவீர்சிங்கின் தாயார் வேடம் பூண்ட எனது நண்பர் பத்மநாபராவ் ஆக்டு செய்ததுதான் எல்லோருடைய மனத்தையும் கவர்ந்தது. அன்றைத்தினம் வந்திருந்த பல ஹைகோர்ட்டு ஜட்ஜுகளும், நாடகத்தை மிகவும் புகழ்ந்ததாக சேஷகிரி ஐயர் எனக்குத் தெரிவித்தார். அக்காலம் “நியூ இந்தியா” என்னும் தினப் பத்திரிகையைப் பிரசுரம் செய்து வந்த பெசண்ட் அம்மை, இந்நாடகத்தைப் பார்த்து, மறுநாள் இதைப் பற்றிப் புகழ்ந்து பேசியதுமன்றி, இந்திய தேசத்தில் தற்காலம் மழுங்கிப் போயிருக்கும்