பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/499

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

484

நாடக மேடை நினைவுகள்


நாடக மேடை நினைவுகள் இதை முதன் முறை நடித்தபொழுது பல்லாரி ராகவாச்சார்லு என்னும் சிறந்த தெலுங்கு ஆக்டர் மஹம்மதிய அரசனாகிய பஹதூர்ஷா வேடந் தரித்தார். அவர் நான் தமிழில் எழுதிய வார்த்தைகளையெல்லாம் ஹிந்துஸ்தானியில் மொழி பெயர்த்துப் பேசினார். இவர் கடைசி காட்சியில் மிகுந்த புத்தி சாதுர்யமாய் நடித்த ஒரு விஷயத்தை, நாடகத்தை நான் அச்சிட்டபொழுது, அதையும் சேர்த்து அச்சிட்டேன். கதாநாயகனான ரணவீர்சிங், மகம்மதிய வீரர்களால் கொல்லப்பட்ட பிறகு, இவனது வீரத்தை யறிந்த பஹ்தூர்ஷா, தன் வீரர்களைக் கொண்டு மடிந்த ரஜபுத்ர வீரனது சவத்தை எடுக்கச் சொல்லி, அதைத் தானே பின்தொடருகிற தருவாயில், தான் மேலே அணிந்திருந்த விலையுயர்ந்த போர்வையை அச்சவத்திற்குப் பெருமையாக அதன் மீது போர்த்தியதாக நடித்துக் காட்டினார் எனது நண்பராகிய ராகவாச்சார்லு. இது மிகவும் நன்றாயிருக்கிறதென, அவரது அனுமதியைப் பெற்று அச்சிடுங்கால் இதையும் சேர்த்து எழுதினேன். புத்தி சாதுர்யமுடைய சிறந்த ஆக்டர்கள், கிரந்த கர்த்தாக்களுக்கும் பல அருமையான விஷயங்களைக் கற்பிக்கின்றனர்!

1915ஆம் வருஷமும் எங்கள் சபையின் சரித்திரத்தில் ஒரு முக்கியமானதெனக் கூற வேண்டும். இவ்வருஷத்தில் மாத்திரம் 363 புதிய அங்கத்தினர் சபையைச் சேர்ந்தனர். இதுவரையில் இத்தனை பெயர் ஒரே வருஷத்தில் சபையைச் சேர்ந்ததில்லை. இனிமேலும் அப்படி நடப்பது மிகவும் கடினம் என்றே எண்ணுகிறேன்.

இவ் வருஷம், முன்பே இருந்த தமிழ் தெலுங்குப் பிரிவுகளுடன் எங்கள் சபைக்கு ஒரு இங்கிலீஷ் பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு என் நண்பரான கே.ஆர். சீதாராம ஐயரைக் கண்டக்டராக ஏற்படுத்தினார்கள். இவர் என்னுடன் கலாசாலையில் படித்தவர். பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். ஆங்கிலத்தில் ரெசிடேஷன் ஒப்புவிப்பதில் மிகவும் நிபுணர். ஆங்கிலத்தில் நாடகம் நடிப்பதிலும் மிகவும் கெட்டிக்காரர். இவரது ஆங்கில உச்சரிப்பு இங்கிலீஷ்காரர்களும் மெச்சும்படியாக அவ்வளவு சுத்தமாயிருக்கும். ஷேக்ஸ்பியர் நாடகங்களில், ஒதெல்லோ நாடகப் பாத்திரத்தையாடுவதில் பெரும் கீர்த்தி