பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சர். சி.பி. இராமசாமி அய்யர், தேசிய இயக்கத்தின் தலைவராக விளங்கிய சத்தியமூர்த்தி, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் முதலியோர் ஆவார்கள். அக்காலத்தில் நீதி மன்றத்தில் நீதியரசராகப் பணியாற்றிய பி.வி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் பம்மல் சம்பந்தனாரின் நாடகப் பணிக்குத் துணை செய்தார்.

நாடகம் என்பது தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டும் அதனைக் கண்டுகளிப்பர் என்றும் நிலவிய கருத்தை மாற்றி நல்ல மேடை அமைத்து, பலவகை நாடகங்களை நடத்தித் தமிழ் நாடகத்தை மேம்படுத்தினார்.

தற்போதுள்ள போக்குவரத்து வசதிகள் அறவே இல்லாத அக்காலக்கட்டத்தில், பம்மல் சம்பந்த முதலியார் தன்னுடைய நாடகங்களை இந்தியாவில் உள்ள நகரங்களிலும் கடல் கடந்து பர்மா, இலங்கை முதலிய நாடுகளிலும் மேடை ஏற்றினார். இலங்கையில் அவருடைய நாடகங்களைப் பார்த்த கலையரசு சொர்ணலிங்கம் என்பவர், பிற்காலத்தில் ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சிக்குப் பாடுபட்டார். அவர் பம்மல் சம்பந்த முதலியாரைத் தன்னுடைய ஆசான் என்று குறிப்பிட்டுள்ளார்.

அக்காலத்தில் நடத்தப்பட்ட நாடகங்கள் அனைத்தும் இன்பியல் முடிவுடையன. சம்பந்த முதலியார் அந்நிலையை மாற்றி ஆங்கில நாடகங்கள் அமைப்பைப் போன்று, இன்பியலும் துன்பியலும் கலந்து வரும் நாடகங்களைப் படைத்தார். தமிழ் நாடக மேடையில் செய்த பெரிய புரட்சி இதுவாகும்.

ஆங்கில நாடகங்களையும், வடமொழி நாடகங்களையும் அரங்கேற்றும்போது அவற்றைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தார். அதன் விளைவாக வேற்று மொழி நாடகங்கள் தமிழர்களுக்கு அந்நிய நாடகங்களாக ஆகாமல் தடுத்தார்.

வடமொழி, ஆங்கிலம், பிரெஞ்சு, செர்மன், லத்தீன் முதலிய மொழிகளிலிருந்து அரங்கேற்றியதன் மூலம் நாடகம் பற்றிய பரந்த - விரிந்த பார்வையைத் தமிழக மக்களிடம் ஏற்படுத்தினார்.

பம்மல் சம்பந்த முதலியார் ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு, செர்மன், லத்தீன் முதலிய மொழிகளிலிருந்து நாடகங்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். அவருடைய மொழிபெயர்ப்பு, தமிழ் நாடகக் கலைக்குக் கிடைத்த பெருஞ் செல்வமாகும். “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்” என்ற மகாகவி பாரதியாரின் கருத்தை மெய்ப்பித்துள்ளார்.

அந்நாட்களில் தமிழ் நாடகங்கள் விடிய விடிய நடக்கும். அந்நிலையை மாற்றித் தமிழ் மேடை நாடகங்களை மூன்று மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று காலத்தைச் சுருக்கிய பெருமை