பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/500

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

485


பெற்றார். எம். சுந்தரேச ஐயரைவிட, இதில் சில பாகங்களில் அதிக விமரிசையாய் நடித்தார். தமிழ் நாடகங்களிலும் சிலவற்றுள் நடித்தார். எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதியுள்ள எட்டு ஒன்பது சிறு ஆங்கில நாடகங்களிலெல்லாம் முக்கியமான பாத்திரங்களை இவர்தான் நடித்தார். அவைகளெல்லாம் இவருக்கென்றே எழுதப்பட்டனபோல், அவைகளிலெல்லாம் அவ்வளவு சாதுர்யமாக நடித்தார். எனது பால்ய நண்பர்களிலொருவ ராகிய இவரைப்பற்றி எழுத வேண்டியபோதும், இறந்த காலத்தில் எழுத வேண்டியதாயிருக்கிறது; நிகழ் காலத்தில் எழுதுவதற்கில்லாதது என் துர்ப்பாக்கியங்களிலொன்றாம்.

இவ்வருஷம் எங்கள் சபையின் முன்னூறாவது நாடகம் நடத்தப்பட்டது. இதற்காக “சவுத் இந்தியன் ஆத்லெடிக் அசோசியேஷன்” மைதானத்தில் ஒரு பெரிய கொட்டகை போட்டு, அதில் “காதலர் கண்கள்” நாடகத்தையும், “நன்றி மறவா வறிஞர்கள்” என்னும் ஒரு ஹாஸ்யத்தையும் நடத்தினோம். இதற்கு கவர்னர் லார்ட் பென்ட்லென்ட் விஜயஞ் செய்தார். இந்நாடகத்தின் வரும்படி ரூபாய் 302-13-5, “சென்னை ஆஸ்பத்திரி கப்பல்” பண்டுக்கு நன்கொடையாகக் கொடுத்தோம். இதன்றி பத்து மாதங்களுக்கு, மாதம் 100 ரூபாய் விகிதம் அந்தக் கப்பல் செலவுக்காக அனுப்பினோம். ஐரோப்பிய யுத்தத்திற்கு இந்தியாவிலிருந்து பல பெரிய ராஜாக்கள் முதலியோர் செய்த உதவியுடன், எங்கள் சபையும் ஸ்ரீராமர் சேது பந்தனம் செய்ததற்கு, அணிப்பிள்ளைகளும் உதவியது போல், தன்னாலியன்றளவு உதவி செய்தது.

அன்றியும் ஹைகோர்ட்டு பிரதம ஜட்ஜ் சர் ஜான் வாலிஸ் மனைவியார் சேப்பாக்கத்தில் ஏற்படுத்திய கொண்டாட்டத்திற்காக, இவ்வருஷம் “சபாபதி”யின் பாகமொன்றை, ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினேன். இதை “சபாபதி நான்காம் பாகம்” என்று இப்பொழுதுதான் அச்சடித்து வெளிப்படுத்தியிருக்கிறேன். ஒரு சிறு நாடகமாயிருந்தபோதிலும், ஆங்கிலமும் தமிழும் கலந்திருந்தபோதிலும், இதைப் பார்த்தவர்கள் இது நன்றாயிருக்கிறதெனப் புகழ்ந்தார்கள். அதற்கு அத்தாட்சியாக, இந்நாடகமானது அச்சிடப்பட்டு முன்னரே, அநேகம் தடவைகளில் என்