பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/518

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப.சம்பந்த முதலியார்

503


இன்னாரென்று எனக்கு இன்றளவும் தெரியாது) ஒரு மோட்டார் வண்டியில் வந்து, என்னைப் பார்த்து அதை நிறுத்தி, “எங்கே நடந்து போகிறீர்கள்?” என்று கேட்டார். அதன் பேரில், எனது வெட்கத்தையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி, அவரிடம் நாடகக் கொட்டகைக்குப் போக வழி தெரியாது தடுமாறிக் கொண்டிருக்கிறேன் என்று உண்மையை உரைத்தேன். அதன் பேரில் அவர் நகைத்து, ‘வாருங்கள் என்னுடன்’ என்று சொல்லி, என்னைத் தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு என்னை நாங்கள் நாடகமாடிய மீனாட்சி நாடக சாலைக்குக் கொண்டுபோய்விட்டார். போகிறவழியில், என்னுடன் அவர் பேசிய வார்த்தைகளால், அவர் என்னை நாடகமாடும் பொழுது, ஒவ்வொரு தினமும் மேடையின்மீது பார்த்தவர் என்பதை அறிந்தேன். அவர் என்னை நன்றாயறிந்தவராய்த் தோன்றியபோது, ‘நீங்கள் யார்?’ என்று அவரை நான் கேட்க வெட்கப்பட்டேன். நாடக சாலையண்டை நான் இறங்குவதன்முன் அவருக்கு நான் அவர் செய்த உதவிக்காக வந்தனம் அளிக்க, இதை ஒரு பொருட்டாக வந்தனம் அளிக்க வேண்டுமா என்று சிரித்துவிட்டு, இராத்திரி உங்களை மேடையின்பேரில் காண்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார். மறுபடி நான் மதுரைக்குப் பன்முறை போனபோதிலும், அவரை என் துர்அதிர்ஷ்டத்தால் மறுபடி சந்திக்க நேரிடாமலிருக்கிறது.


இவ்விடத்தில் இரண்டாவது நினைவு என்னவென்றால், “லீலாவதி-சுலோசனா” நாடகத்தில் நான் ஸ்ரீதத்தனாகக் “கைவளை” காட்சியின் ஆரம்பத்தில் நடித்துக் கொண்டு வரும்பொழுது, ஸ்ரீதத்தன் தகப்பனார் அவனை மணம் செய்து கொள்ளும்படியாகச் சொல்லும் பொழுது, மூர்ச்சையாக வேண்டியிருக்கிறது; இக்காட்சியை எனது நண்பர் ஸ்ரீநிவாசராகவாச்சாரியுடன் பன்முறை ஆடியிருக்கிறேன்; நான் மூர்ச்சையாகும் போதெல்லாம் என் பக்கலில் பின்னால் நின்று கொண்டிருந்து, தன் கரங்களில் என்னைத் தாங்கிக் கொள்வார்; அன்றைத்தினமும் அவர் பின்னால் இருக்கிறாரென நினைத்து மூர்ச்சையானதுபோல் நடிக்க, அவர் ஏதோ காரணத்தினால் வேறொரு இடத்தில் நின்று கொண்டு ஏதோ வேறு கவனமாய் இருக்க, ‘படால்’ என்று கீழே விழுந்தேன். விழுந்த வேகத்தில் காலிலும் தோளிலும்