பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/520

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப.சம்பந்த முதலியார்

505


இதைப்பற்றிக் கேள்விப்பட்ட சிலர், மறுநாள் என்னிடம் வந்து, “எப்படியாவது லீலாவதி - சுலோசனா நாடகத்தில் ரங்கவடிவேலுவை, நர்த்தனம் செய்யச் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். “இந்த நாடகத்தில் நர்த்தனம் செய்வதற்கு இடமில்லையே”யென்று நான் கூறியும், கேளாதவர்களாய் வற்புறுத்தவே, “இந்நாடகம் முடிந்ததும் பிரத்யேகமாக நர்த்தனம் செய்யச் சொல்லுகிறேன்”என்று அவர்களுக்குச் சமாதானம் சொல்லி, அங்ஙனமே நாடகம் முடிந்ததும், இரவு இரண்டு மணிக்குமேல் ஆனபோதிலும் ரங்கவடிவேலுவை நாட்டியம் ஆடச் செய்தேன்.

மதுரையில் எனது நண்பர் நர்த்தனம் செய்ததைப் பார்த்த சிலர் இத்தனை வருடங்களாகியும், அதைப்பற்றிச் சிலாகித்துப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். எனதுயிர் நண்பர் நாட்டியமானது ஜனங்களின் மனத்தை இவ்வளவு கவர்ந்ததற்குக் காரணம் என்னவென்று யோசிக்குமிடத்து, இதுதான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. கடினமான நாட்டிய வித்தையை ஒருவன் கற்ற போதிலும், அதை ஆடி, பார்ப்பவர்களின் மனத்தைச் சந்தோஷிப்பிப்பதற்கு அதற்கு ஏற்றதான உருவம் இருக்கவேண்டும். அதிக ஸ்தூல தேகமும் உதவாது; அதிக மெல்லிய தேகமும் உதவாது; அதிக ஸ்தூல தேகமுடையவர்கள் ஆடுவதைப் பார்த்திருக்கிறேன். அப்பொழுது, ஆப்பிரிக்கா தேசத்திலுள்ள ஹிப்பப்டோமஸ் ஆடுவதுபோல் என் மனத்திற்குப் பட்டுள்ளது. மிகவும் மெலிந்த எலும்புகளெல்லாம் வெளியில் தெரிந்து கொண்டிருப்பவர்கள் ஆடுவதைப் பார்க்கும் பொழுது, எலும்புக்கூடு நர்த்தனம் செய்வதுபோல் தோன்றுகிறது. அன்றியும் ஆடுபவர் மிகவும் குட்டையாயு மிருக்கலாகாது; நெட்டையாயுமிருக்காலாது. மிகவும் குட்டையாயிருப்பவர்கள் ஆடுவதை யானைக் குட்டி ஆடுவதற்குச் சமானமாகச் சொல்லலாம். மிகவும் நெட்டையாயிருப்பவர்கள் ஆடுவதை ஒட்டகம் ஆடுவதற்கு ஒப்பிடலாம். இக் குறைகளெல்லாமின்றி, சரியான உயரமுடையவர்கள் இந்நாட்டிய சாஸ்திரத்தைப் பயின்றபோதிலும், அவர்களுக்கு ஜகன பாகம் கொஞ்சம் பெருத்திருக்கவேண்டும்; இது ஸ்திரீகளுக்குரிய கலை; பெண்டிருக்கு சுபாவத்தில் ஜகனமானது பெருத்திருக்கு