பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/523

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

508

நாடக மேடை நினைவுகள்



இங்கு நடந்த நாடக தினங்களில், ஏறக்குறைய தினம் மழை பெய்தபோதிலும், நல்ல வசூலாயிற்று. முன்தினம் போலவே வாரிக் மேஜர் என்பவர் எங்கள் சௌகரியத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.

இவ்விடத்தில் நடந்த நாடகங்களைப்பற்றி இங்கு எழுதத்தக்க விசேஷங்கள் ஒன்றும் எனக்கு ஞாபகம் வரவில்லை. எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயருடைய சங்கீதம் மிகவும் மெச்சப்பட்டது. ஆயினும் ஆக்டிங் விஷயத்தில் ரங்கவடிவேலுக்கிருந்த புகழ் கொஞ்சமேனும் குன்றவில்லை.

இங்கு நானிருந்தபொழுதுதான், எனக்கு சக்ரவர்த்தியின் பிறந்த தினம் கொடுக்கும் கௌரவ பட்ட ஜாபிதாவில், “ராவ்சாஹெப்” என்கிற பட்டம் கொடுத்ததாக, சென்னையிலிருந்து வந்த தந்தி மூலமாகத் தெரிந்தது. இதை நான் ஒரு பொருட்டாகப் பாராட்டாவிட்டாலும், இந்த சமாச்சாரம் எங்கள் சபையின் அங்கத்தினர் மூலமாகக் கொழும்பிலுள்ள நாடாகாபிமானிகளுக்கெல்லாம் தெரிந்துவிட்டது. அதன் பேரில், இங்கு நாங்கள் நடத்திய “சபாபதி” என்னும் நாடகத்தில் ஒரு காட்சியில், எனது நண்பர் ராகவாச்சாரியார், நாடகத்தின் நடுவில் கதையோடு ஒட்டி ஏதோ கூறுவது போல், இதை வெளியிட்டார். உடனே ஹாலில் வந்திருந்தவர்களெல்லாம் இரண்டு நிமிஷம் வரையில் இடைவிடாது கரகோஷம் செய்தனர். அப்பொழுதுதான் சிங்களவாசிகளின் மனத்தை எனது நாடகங்களினால் நான் திருப்தி செய்ததன் திறத்தைக் கண்டேன். ஆயினும் இதை எங்கள் சபைக்கு அவர்கள் செய்த கௌரவமென்றே கொண்டேன்.

இங்கு நாடகங்களை முடித்துக் கொண்டு, சில காரணங்களால் யாழ்ப்பாணம் போக வேண்டுமென்றிருந்த ஏற்பாடு முடியாமற்போகவே, அதற்குப் பதிலாகச் சென்னைக்குத் திரும்பிப் போகும்போது கும்பகோணத்தில் தங்கி 5 நாடகங்கள் ஆட வேண்டுமென்று தீர்மானித்தோம். அதன்மீது எங்கள் சிங்கள நண்பர்களிடமிருந்து பிரிய மனமில்லாதவராய், விடைபெற்று, வந்த வழியாகவே இந்தியாவுக்குத் திரும்பினோம். மறுபடியும் நான் இலங்கைத்