பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/525

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

510

நாடக மேடை நினைவுகள்


வெளியூரிலிருந்தோம்; 17 நாடகங்கள் ஆடினோம்; பெரும்பாலும் அவைகளெல்லாம் இரவு நாடகங்களாயிருந்த படியால் மிகவும் சிரமமாயிருந்தது. இருந்தபோதிலும் எனக்கும் மற்ற ஆக்டர்களுக்கும் தேகத்தில் ஒரு குறையுமின்றி, இந்நாடகங்களை யெல்லாம் பூர்த்தி செய்து கொண்டு, பரமேஸ்வரன் அருளால் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். இதில் ஒரு சிறிய வேடிக்கை. 45 நாட்கள் கண்டக்டராகவும், நாடகங்களில் கதாநாயகனாகவும் இரவு பகலாகக் கஷ்டப்பட்டு, நாடகங்களையெல்லாம் முடித்துக் கொண்டு, திரும்பி வந்தவுடன், சென்னையிலிருந்து சபையின் காரியதரிசி எழுதிய கடிதம் ஒன்றிற்கு ஏன் உடனே பதில் எழுதவில்லை என்று ஓர் அங்கத்தினருடைய பிரேரேபணையினால், என் மீது குற்றங் கூறினர் சிலர்! அந்த மெம்பரின் பெயரை இங்கு எழுத எனக்கு இஷ்டமில்லை. அவர் மீது குற்றமில்லை. “பெற்ற வட்கே தெரியும் அந்த வருத்தம், பிள்ளை பெறாப் பேதை அறிவார்களோ?” இந்தச் சந்தர்ப்பத்தில் தாயுமான ஸ்வாமிகள் பேதை என்னும் பதத்தை உபயோகித்துள்ளது கவனிக்கத்தக்கது. சபையின் வெளிப் பிரயாணத்தில் செலவு போக, லாபம் 2638-8-6 கிடைத்தது. இதனின்றும் நெல்லூர்ப் பிரயாணத்தில் நான் முன்பு கூறியபடி நேர்ந்த நஷ்டமாகிய 535-13-3 கழித்து, மிகுதி நிகர லாபம் 2102-9-3 எங்கள் சபையின் கட்டட பண்டுக்குச் சேர்த்தோம்.

இவ் வருஷம் டிசம்பர் விடுமுறையில், 45 நாட்களுக்கு விக்டோரியா பப்ளிக் ஹால் மேல்மாடியை வாடகைக்கு அமர்த்தி, சாயங்காலங்களில் நாடகமாடி வந்தோம். பல தினங்களில் ஜனங்கள் உட்கார இடமில்லாமல், டிக்கட்டுகள் விற்பதை நிறுத்த வேண்டியிருந்தது. இந்நாடகங்களினால் செலவு போக 3088 ரூபாய் லாபம் கிடைத்தது. அதில் ரூபாய் 3000 கட்டட பண்டுக்குச் சேர்த்தோம். ஆகவே, பல விதத்திலும் எங்கள் சபை ஸ்தாபித்து 25 ஆண்டுகள் பூர்த்தியாகிய இவ்வருஷம், சபையானது மிகவும் உன்னத ஸ்திதியை அடைந்தது என்றே கூற வேண்டும்.

இவ்வருஷம் இந் நாடக மேடை நினைவுகளில் நான் குறிக்க வேண்டிய, என்னைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்று உண்டு. அதாவது சபை ஆரம்பித்தது முதல் இந்த இருபத்