பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/527

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

512

நாடக மேடை நினைவுகள்


அவர்களைப் பலவந்திக்க, அதனால் அவர்கள் வோட் கொடுப்பார்களானால், அதில் என்ன மகிமை? அப்படிச் செய்வது தவறு என்பது என்னுடைய கோட்பாடுகளி லொன்று. இரண்டாவது, நான் எந்த மனிதனையும், எனக்காக ஒன்றைக் கொடு என்று யாசிக்கக்கூடாது என்கிற நியமமுடையேன்; இக்காரணம் பற்றியே, அநேக வருஷங்களில் என்னுடைய நண்பர்கள் என்னை, முனிசிபல் கார்ப்பரேஷன், லெஜிஸ்லேடிவ் கவுன்சில் முதலிய சபைகளுக்கு நிற்கும்படிக் கேட்டும், நான் வேண்டாமென்று மறுத்திருக்கிறேன். எனக்கேதாவது வேண்டியிருந்தால், என்னைப் படைத்த ஈசனை வேண்டுவேனே யொழிய அவர் படைத்த மக்களை யாசியேன். மூன்றாவது காரணம், இவ் விஷயங்களிலெல்லாம் ஈசன் விதித்தபடியாகின்றது, நம்முடைய பிரயத்தனத்தில் ஒன்றும் பயனில்லையென்பது என் தீர்மானமான எண்ணம்.

நான் முன்னால் தீர்மானித்தபடி, சபை ஆரம்பித்து இருபத்தைந்து வருஷங்கள் வரை கண்டக்டராகச் சபைக்கு உழைத்தேன். அந்த இருபத்தைந்து வருடங்களும் கழிந்தவுடன், ‘நாம் உழைத்தது போதும். இனி மற்றவர்கள் உழைக்க வேண்டியது நியாயம், அவர்களும் இவ்வேலையில் பயிற்சியடைய வேண்டியது; அப்பொழுது தான் அவர்களுக்கும் இதன் கஷ்ட நஷ்டங்களும், அருமை பெருமையும் தெரியும்’ என்று தீர்மானித்து, இவ்வேலை மறு வருஷத் தேர்ந்தெடுத்தல் வந்தபோது, நிற்காமல் விலகிக் கொண்டேன். இனிமேல் இந்த வேலைக்கு நான் நிற்கப் போகிறதில்லை யென்பதை எனது நண்பர்களுக்கும் தெரிவித்து, நான் கண்டக்டராக நடத்திய கடைசி நாடகம் முடிந்ததும், மேடையின் பேரில் அவர்களையெல்லாம் ஒருங்கு சேர்த்து, ‘இத்தனை வருடங்களாக நான் கண்டக்டராக இருந்தபோதெல்லாம் உங்களில் அநேகரைக் கஷ்டப்படுத்தியிருக்கக்கூடும். தெரிந்தும் தெரியாமலும் உங்களுக்கு அபராதமிழைத்திருக்கக்கூடும்; அவற்றை யெல்லாம் மன்னியுங்கள்"என்று பிரார்த்தித்து, இத்தனை வருடங்களாக என்னுடன் ஒத்து உழைத்து, சபையின் கீர்த்தியைக் காப்பாற்றியதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த வந்தனத்தையளித்து, அவர்களிடமிருந்து விடை