பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/529

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

514

நாடக மேடை நினைவுகள்


மாறுபெயராக வைத்து என் புதிய நாடகத்தை அனுப்பினேன். இதை எழுதச் சற்றேறக்குறைய எனக்கு நான்கு ஐந்து மாதங்கள் பிடித்தன. கடைசியில் எப்படி நாடகத்தை முடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்துவிட்டு, நாடகத்தை அனுப்ப வேண்டிய காலத்திற்கு ஒருவாரம் வரையில், காலஹரணம் செய்து கொண்டிருந்து விட்டேன். பிறகு ஏழு நாட்களுக்குள் நாடகத்தைப் பூர்த்தி செய்து, (என் வழக்கப்படி பென்சிலினால் எழுதிய காட்சிகளையெல்லாம்) இங்கியில் எழுதி அனுப்ப வேண்டுமேயென்று அவசரப்பட்டு, ஒரு வகையாக முடித்து நானாக இங்கியில் பிரதி செய்து அனுப்பினேன். இந்த அற்ப விஷயத்தை ஒரு பொருட்டாக இங்கு எடுத்தெழுதியதற்கு ஒரு காரணமுண்டு. நான் அச்சிடும் புஸ்தகங்களிலெல்லாம் ஒரு பிரதி, கொழும்பில் வசிக்கும் கற்றறிந்த மாது சிரோமணியாகிய திருநாவுக்கரசு அம்மாளுக்கு அனுப்பும் வழக்கப்படி, இப் புஸ்தகம் அச்சிட்டவுடன் ஒன்றையனுப்ப, அவர்கள் நாடகத்திலுள்ள சாராம்சங்களை எடுத்துக் கூறி, கடைசியில், “நீர் நாடகத்தைக் கடைசியில் முடித்தது எனக்கு அவ்வளவு திருப்திகரமாயில்லை . ராஜேஸ்வரியும் ரங்கநாதமும் ... கடைசியில் சந்திக்கும் காட்சி ஏதோ நீர் அவசரப்பட்டு எழுதியது போல் எனக்குத் தோன்றுகிறது”என்று, நான், ‘யார், இதை அறியப் போகிறார்கள்?’ என்று இருந்த மர்மத்தை வெளியிட்டனர். ஆகவே, கிரந்த கர்த்தாக்கள் “நம்முடைய மனத்திலிருப்பது மற்றவர்களுக்கு என்ன தெரியப் போகிறது?” என்று இறுமாந்திருக்கலாகாது! என்பதை யறிந்தேன். ஆகவே, கிரந்த கர்த்தாக்கள் இதைச் சற்றுக் கவனிப்பார்களாக; அவசரப்பட்டு எதையும் எழுதாதிருப்பார்களாக. இந்தச் சந்தர்ப்பத்தில் என்னிடமுள்ள ஒரு கெட்ட குணத்தை எழுதுகிறேனிங்கு. நான் எழுதும் புஸ்தகங்களில் என்ன குற்றங்களை நானே கண்டாலும், அல்லது பிறர் எனக்கு எடுத்துக் காட்டினாலும் அவற்றையெல்லாம், அப்புஸ்தகம் அச்சிடுமுன் மாற்றி விடுவேன்; ஒரு முறை அச்சிட்டபின், “அச்சாசிரியர் பிழை”எனக் கூறப்பட்ட எழுத்துப் பிழைகள் தவிர, மற்றவைகளை மாற்றுவதில்லை என்னும் ஒரு மூடப் பிடிவாதம் என்னிடம் உண்டு இன்றளவும். இது என்னை விட்டு முற்றிலும் அகல