பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

519


 கையினால் அதற்குப் பால் குடிக்கச் செய்து அதை “ஒத்திகை” செய்து பழக்கி வந்தேன்! அவன் கூப்பிடாமலே அவனைப் பின்தொடரச் செய்தேன். நாடக தினத்தில் அது அப்படியே செய்ய, சபையில் வந்திருந்தவர்கள் அதிகக் கரகோஷம் செய்தனர். இந் நாடகத்தைப் பிறகு நடிக்கும் போதெல்லாம் இதற்காக ஒரு சரியான நாய்க்குட்டியை வாங்கிப் பழக்க வேண்டி வந்தது.

எனதுயிர் நண்பர் ஆயுட் காலத்தில் மிகவும் அருமையாய் நடித்த வேடங்களில், இந்நாடகத்தின் கதாநாயகியாகிய மங்கையர்க்கரசியின் வேடம் ஒரு முக்கியமானதாம். இவருக்குப் பிறகு எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயர், இந்த வேடத்தை ஏறக்குறைய அவரைப் போலவே மிகவும் விமரிசையாகப் பன்முறை நடித்திருக்கின்றனர்.

இந்நாடகத்தில் எனது நண்பராகிய டி. சுந்தரவரத ஐயங்கார், நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான “ராஜேஸ்வரி” யாக மிகவும் நன்றாய் நடித்துச் சபையோரைத் திர்ப்தி செய்தனர்.

இவர் யாழ்ப்பாணத்து ஸ்திரீயைப்போல் ஆடை ஆபரணங்கள் அணிந்து தோன்றியது எல்லோராலும் மெச்சப் பட்டது. இவருக்குப் பாடும் சக்தியில்லாவிட்டாலும், இப்படிப்பட்ட ஸ்திரீ பாகங்களை நடிப்பதில் மிகவும் சமர்த்தர் என்றே நான் கூற வேண்டும். இவர் இதன்பிறகு மிகவும் சில தடவைகளில்தான் ஸ்திரீ வேடம் பூண்டு எங்கள் சபையில் நடித்திருக்கின்றனர். தற்காலம் இவர் ஸ்திரீ வேடம் பூணாதது எங்கள் சபையின் துர்ப்பாக்கியமென்றே சொல்ல வேண்டும்.

இந்நாடகம் முதன்முறை நடத்தப்பட்டபொழுது, எனது பால்ய நண்பர்களுள் ஒருவராகிய கே. ஆர். சீதாராமய்யர் திருமெஞ்ஞான முதலியாராக நடித்தார். அவரது இளங் குமாரத்தியாக அப்பொழுது சுமார் 9 வயதுடையவளாயிருந்த என் குமாரத்தி, சி.சௌ. தர்மாம்பாள் நடித்தாள். இதுதான் எங்கள் சபை தோன்றி முதன் முறை எங்கள் நாடக மேடையின் பேரில் பெண்பால் ஆடியது. இதைக் கொண்டாட வேண்டுமென்று கூறி, எங்கள் சபை பிரசி