பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/565

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

550

நாடக மேடை நினைவுகள்


முக்கிய வேடம் தரித்த மேற்கண்ட நாடகத்திற்கும் நள சரித்திரத்திற்கும், ஜனங்கள் வராதது (நெல்லூரிலிருந்தது போல) ஜனங்கள் குற்றமல்ல; முக்கியமான தமிழ் நாடாகிய கோயமுத்தூரில் தெலுங்கு நாடகமாடிய எங்கள் சபையோரின் குற்றங்களே. இவ்விரண்டு தெலுங்கு நாடகங்களினால் எங்கள் பைக்கு ரூ 160-10-6 நஷ்டம் நேரிட்டது. தமிழ் நாடகங்களின் கண்டிராக்டினால் கிடைத்த ஆயிரம் ரூபாய் லாபத்தினின்றும் அந்நஷ்டத்தைக் கழிக்க வேண்டி வந்தது. “பிச்சை எடுத்ததாம் பெருமாள், அத்தைப் பிடுங்கியதாம் அனுமார்” என்னும் பழமொழியை எனது நண்பர்களிற் சிலர் எனக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நினைப்பூட்டினர்.

நாங்கள் இங்காடிய மற்றிரண்டு தமிழ் நாடகங்களாகிய மனோஹரன், காலவரிஷி என்பவற்றிற்கு முதல் நாடகத்தில் வந்தது போலவே வெகு ஜனங்கள் வந்திருந்து, நாடக சாலையில் இடம் போதாமற் போயிற்று. நாடக சாலை புரொப்ரைட்டர் வின்ஸென்ட் என்பவர், சாதாரணமாக, நாடக ஆரம்பத்திற்கு ஒரு மணிக்கு முன்தான் நாடகசாலையின் கதவுகளைத் திறக்கிற வழக்கமாம். இந்தத் தமிழ் நாடகங்களுக்கெல்லாம் இரண்டு மணி காலத்திற்கு முன்பே ஜனங்கள் வெளியில் சேர்ந்து கோஷம் செய்து கொண்டிருக்கின்றனர் என்று அறிந்தவராய், அந்த வழக்கத்தையும் மாற்றி ஏழு ஏழரை மணிக்கெல்லாம் கதவுகளைத் திறந்து விட்டார்! நந்தனார் சரித்திர நாடகத்திலும் சேலத்தில் செய்த யுக்தியின்படி, இங்கும் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலுவை நர்த்தனம் செய்யச் சொல்லி, அவர் பெயரை நாடக விளம்பரங்களில் அச்சடித்தோம். ஏதோ என் சிநேகிதனை நான் அதிகமாய்ப் புகழ்கிறேன் என்று எனது நண்பர்கள் எண்ணாதிருக்கும்படி இங்கு நடந்த ஒரு சிறு விருத்தாந்தத்தை எழுதுகிறேன்.

இவ்வூரில் கடைசியாட்டமாக வைத்துக்கொண்டது எனது நண்பர் டி.சி. வடிவேலு நாயகர் எழுதிய “வள்ளியின் கலியாணம்” அதில் நாடகாசிரியராகிய வடிவேலுவே வள்ளியாகவும் டாக்டர் ஸ்ரீனிவாச ராகவாச்சாரி, சுப்பிர மணியராகவும் நடிக்க வேண்டுமென்று ஏற்பாடாயிருந்தது. நோட்டீஸ் முதலியனவெல்லாம் அச்சிட்டுமாயது. இந்