பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/566

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

551


நாடகத்தை ஆடவேண்டுமென்று எங்கள் நிர்வாக சபையில் தீர்மானித்ததற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், எல்லாம் சம்பந்தத்தின் நாடகங்களாக இருக்கக் கூடாது, மற்றவர்களுடைய நாடகங்களையும் ஆட வேண்டும் என்பதுடன்; எல்லாத் தமிழ் நாடகங்களிலும் சம்பந்தமும் ரங்கவடிவேலுவும் பிரதானமான பாத்திரங்களை எடுத்துக் கொள்ளலாகாது, மற்றவர்களுக்கும் அயன்பார்ட் என்னும் பிரதான பாத்திரங்களைக் கொடுக்க வேண்டும் என்று, எனது நண்பர்களில் ஒருவர் நிர்வாக சபையின் கூட்டத்தில் பிரேரேபித்தார். அதன் பேரில் அவர் கூறுவது நியாமென்று நானும் எனது நண்பர் ரங்கவடிவேலுவும் ஒப்புக்கொண்டோம். இத்தனை விவாதத்தின் பேரில் தீர்மானிக்கப்பட்ட நாடகம் இந்த ‘வள்ளி கலியாணம்.’ நந்தனார் நாடகம் முடிந்தவுடன், மறுநாள் காலை எனது நண்பர் வடிவேலு நாயகர் என்னிடம் வந்து “வாத்தியார், ஒரு சின்ன வேண்டுகோள். இந்தக் கடைசி நாடகத்தை மாற்றிவிடலாமென்றிருக்கிறேன். இங்குள்ளவர்களெல்லாம் ரங்கவடி வேலுவும் நீங்களும் ஆடினால்தான் நல்ல வசூலாகுமென்கிறார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது; ஆகவே, அந்த வள்ளி கலியாணத்திற்குப் பதிலாக, உங்கள் ‘சாரங்கதரா’ நாடகத்தை வைத்துக்கொள்ளலாம்; அதில் நீங்களும் ரங்கவடிவேலுவும் ஆட வேண்டும்” என்று வற்புறுத்தினார். அதன் பேரில் நான் ரங்கவடிவேலுவுடன் கலந்து பேசி, “அப்பா, எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபமில்லை. ஆயினும் இதை மாற்றுவதில், நாங்கள் சம்பந்தப் பட்டிருப்பதால், நாங்கள் ஒன்றும் பேசமாட்டோம். நீ மற்றக் கமிட்டி மெம்பர்களை யெல்லாம் கேட்டு, அவர்களை எல்லாம் சம்மதிக்கச் செய்தால் ஆட்சேபமில்லை” என்று சொன்னேன். அதன்பேரில் மற்றக் கமிட்டி மெம்பர்களையெல்லாம் கேட்டு அவர்களுடைய சம்மதியைப் பெற்று, கடைசி நாடகத்தை, “வள்ளியின் கலியாணத்தி” லிருந்து “சாரங்கதரா” நாடகத்திற்கு மாற்றினார். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், முற்கூறிய நாடகம் தான் இயற்றியது, அதில் தனக்கு முக்கிய ஸ்திரீ பார்ட் இருந்தது; இருந்தும் அதைவிட்டு, தனக்கு முக்கியமான பாகமில்லாத, ரங்கவடி