பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/567

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

552

நாடக மேடை நினைவுகள்


வேலுவிற்கும் எனக்கும் முக்கிய பாகங்களுடைத்தாயிருந்த பிற்கூறிய நாடகத்தை வைக்கும்படி இவரே பிரயாசை எடுத்துக்கொண்டதேயாம். இவர் இவ்வாறு செய்தது, ஒரு விதத்தில் தன் சுய நன்மைக்காக இருந்தபோதிலும், எங்கள் சபையின் பொது நன்மைக்காகவுமிருந்தது என்பதற்கையமில்லை. அவரும், மற்றெல்லோரும் எண்ணியபடியே, “சாரங்கதரா” நாடகத்திற்கு மிகவும் அதிகமாக ஜனங்கள் வந்து, ஏராளமான பணம் வசூலாயிற்று. எட்டு எட்டரை மணிக்கெல்லாம் கடைசி வகுப்புக்கு டிக்கட்டுகள் விற்பதை நிறுத்தி ஒரு ரூபாய் டிக்கட்டுகளே விற்றதாக எனக்கு ஞாபகம். இங்கு நடத்திய எல்லா நாடகங்களையும் விட இதற்குத்தான் அதிக டிக்கட்டுகள் விற்கப்பட்டன. அன்றியும் இந்நாடகமும் ஆரம்பமுதல் கடைசி வரையில் மிகவும் நன்றாய் நடிக்கப்பட்டதென்பது என் அபிப்பிராயம். இந்நாடகத்திலுள்ள ஒவ்வொரு முக்கியமான கட்டத்தையும் சபையோர்கள் மிகவும் சந்தோஷத்துடன் அனுபவித்துக் கரகோஷம் செய்து ஆக்டர்களைத் திருப்தி செய்தனர். நாடகம் முடிந்தவுடன் அதைப் பார்க்க வந்த அநேக பெரிய மனிதர்கள் எங்களிடம் வந்து, நாடகத்தைப்பற்றித் தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்து, எங்கள் சபை இங்கு நாடகம் நடத்துவது இதனுடன் முடிந்துவிட்டதே என்று தங்களுடைய வருத்தத்தையும் தெரிவித்தனர். எங்களுடைய ஆக்டர்களும் (நான் உள்பட) இன்னும் நாடக சபையில் ஆடுவதற்கில்லையே யென்று வருத்தப்பட்டோம்!

இவ்வூரில் நாங்களிருந்த பொழுது, அக்ரிகல்ச்சரல் காலேஜ் தலைவர்; ஸ்ரீமான் தாதலிங்க முதலியார் அவர்களும், சி. வெங்கட ராகவாச்சாரியார் அவர்களும், (பிறகு திவான் பகதூர் பட்டம் பெற்ற) சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் அவர்களும் எங்கள் சபையோருக்குச் செய்த விருந்தும் உபசரணையும் என்றும் மறக்கற்பாலதன்று. இம்முறை சேலம் கோயமுத்தூர் பிரயாணம் மாதிரியாக இனி எப்பொழுதும் வரப்போகிறதில்லை என்று இதைப்பற்றி இன்றும் புகழ்ந்து பேசுவது வழக்கம். நானும் அங்ஙனமே எண்ணுகிறேன். இதற்கு முன் செய்த பிரயாணங்களிலெல்லாம் ஏதாவது ஒரு குறை வந்து கொண்டிருந்தது. இந்தச் சேலம்- கோயமுத்தூர் பிரயாணத்