பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/569

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

554

நாடக மேடை நினைவுகள்


சபை நாடகங்களை நடத்தவில்லையா? அன்றியும், நாம் அங்குப் போய் ஆடுவதனால் அந்த நாடக சாலைக்குக் கொஞ்சம் கௌரவம் அதிகமாகுமேயொழிய, நம்முடைய அந்தஸ்து இழிபடாது என்று பதில் உரைத்து, அந்தக் கொட்டகையிலேயே ஆடினோம். நாங்கள் எண்ணியபடியே, கடைசி வகுப்பாகிய காலெரிக்குத் தவிர மற்ற வகுப்புகளுக்கெல்லாம் ஜனங்கள் ஏராளமாய் வந்தனர். எனக்கு இக்கொட்டகையில் ஆடுவதென்றால், சிறிது கூச்சமாகத்தானிருந்தது. சாதாரணமாக விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகமாடினால், கற்றறிந்தவர்கள்தான் வருவார்கள்; இவ்விடங்களிலெல்லாம் நாடகம் பார்க்க வரும் ஜனங்கள் பெரும்பாலும் பாமர ஜனங்களே; ஆகவே, எங்கள் சபையின் நாடகம் இவர்களுக்கு எப்படி ருசிக்குமோ என்று சந்தேகப்பட்டேன்; அன்றியும் இந்த மாதிரியான நாடகக் கொட்டகைகளுக்கு வரும் ஜனங்களெல்லாம், சங்கீதத்தையே முக்கியமாக விரும்புவார்கள்; நானோ ‘மனோஹரா’ நாடகத்தில் ஒரு பாட்டும் பாடுவதில்லை. ஆகவே, இந்நாடகத்தை, “காலரி ஸ்வாமிகள்” என்று ஆங்கித்தில் கூறப்பட்ட பாமர ஜனங்கள் எப்படி ஏற்பார்களோ என்று சம்சயப்பட்டேன். ஆயினும் அன்று நாடகம் நடத்திய பிறகு அந்தச் சந்தேகமெல்லாம் அறவே நீங்கியது. எவ்விதம் ஆடியபோதிலும் ஆடுபவர்களிடம் தக்க திறமையிருந்தால் சோபிக்காமற் போகாது என்பதை நேராகக் கண்டேன். இதன் பிறகு இவ்விடத்தில் பன்முறை எங்கள் சபையார் நாளது வரை நாடகங்கள் நடத்தியிருக்கின்றனர்; இந்நாடகம் நடத்தியபொழுது, இக்கொட்டகையில் ஸ்ரீமான் கன்னையா என்பவர், கொட்டகைக்காரரிடமிருந்து வாடகைக்கு வாங்கிக் கொண்டு, தமது நாடகக் கம்பெனியின் நாடகங்களை நடத்திக்கொண்டிருந்தார். எங்கள் சபையார் மேற்சொன்னபடி தர்ம கைங்கர்யமாக அக்கொட்டகையில் நாடகம் நடத்த வேண்டுமென்று கேட்டபொழுது, மிகவும் சந்தோஷத்துடன் தான் போட்டுக் கொண்டிருந்த நாடகங்களையும் நிறுத்தி, இலவசமாக எங்களுக்கு அக்கொட்டகையை விட்டார். அன்றியும் நாடக தினம், தன் கம்பெனியின் படுதாக்கள், திரைகள் எல்லாம் எது வேண்டினும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் தயாள