பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/570

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

555


குணத்துடன் உதவினார். இம்மாதிரி இவர் உதவியது இம்முறை மாத்திரம் அன்று இதற்கப்புறம் பன்முறை எங்கள் சபைக்குத் தனது கொட்டகையையும் படுத்தாக்கள் உடுப்புகள் முதலியவையும் கொடுத்து உதவியிருந்தார்.

சாதாரணமாக ஒரு நாடகக் கம்பெனியார், மற்ற நாடகக் கம்பெனிகள் மீதாவது, நாடக சபைகள் மீதாவது பொறாமை கொள்வதுதான் உலக வழக்கமாயிருக்கிறது; அதற்கு மாறாக, நாடகமாடுவதையே தன் ஜீவனாதாரமாகக் கொண்ட இவர், எங்கள் சபையின்மீது இவ்வளவு அன்பு பாராட்டியது மிகவும் புகழத்தக்கதே. அந்த அன்பைப் பலவிதங்களில் நிரூபித்துள்ளார். ஒரு முறை எங்கள் சபை திருநெல்வேலிக்குப் போனபோது, அதற்குச் சற்று முன்பாக அவ்வூரில் நாடகமாடிக்கொண்டிருந்த இவர், தன் கடைசி நாடகத்தின் முடிவில் அவ்வூர் ஜனங்களுக்கு வந்தனமளித்தபோது, மேடையிலிருந்து, “நீங்கள் தமிழ் நாடகங்கள் எப்படிச் சரியாக நடக்க வேண்டுமென்று தெரிந்து கொள்ள விருப்பமுடையவர்களானால், வருகிற வாரம் சுகுண விலாச சபையார் இங்கு வந்து நாடகங்கள் நடத்தப் போகிறார்கள். அவற்றைப் போய்ப் பார்த்து ஆனந்தியுங்கள்” என்று கூறியதாக நான் அறிந்தேன். இதை வாசிக்கும் எனது நண்பர்கள், இவர் செய்ததையும் நெல்லூரில் எங்கள் தெலுங்கு நாடகங்களைப் பார்க்கக் கூடாதென்று முயற்சி செய்த அங்குள்ள ஒரு சபையின் செய்கையையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்களாக! அன்றியும் எங்கள் சபைக்கு ஏதாவது சாமான்கள் வேண்டியிருந்தால், கொஞ்சமும் மனத்தில் அசூயை இல்லாமல் இவர் கொடுத்துதவியது நான் என்றும் மறக்கற்பாலதன்று. அப்படிப்பட்ட பல உபகாரச் செய்கைகளுள் ஒன்றை மாத்திரம் இங்கெடுத் தெழுதுகிறேன். சென்ற 1930ஆம் வருஷம் எங்கள் சபை “கொடையாளி கர்ணன்” என்னும் எனது நாடகத்தைப் போட்டபொழுது அதற்காக இரண்டு ரதங்கள் செய்ய வேண்டியிருந்தது; எங்கள் சபையின் நிர்வாக சபையார் இதற்காக ஏதோ ஒரு தொகை கொடுத்தார்கள்; அதற்கு மேல் இரு மடங்கு தன் பொருளைச் செலவழித்து அர்ஜுனனுக்கும், கர்ணனுக்கும் உபயோகப்படத்தக்க இரண்டு அழகிய ரதங்களை, தானாகத் தன் ஆட்களைக்