பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/571

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

556

நாடக மேடை நினைவுகள்


கொண்டு செய்வித்து உதவினார்! அன்றியும் நான் கர்ணன் வேடம் பூணப் போகிறேன் என்று அறிந்தவராய்த் தானாகத் தன் செலவில் பொன் முலாம் பூசிய கவசமும், குண்டலங்களும் செய்தனுப்பினார்! நான் ஒருவரையும் ஒன்றையும் கேட்பதில்லை என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறிவார்களென நம்புகிறேன். இவராக இதைச் செய்து அனுப்பியதுமன்றி, இதற்காக நான் என்ன பணம் கொடுக்க வேண்டுமென்று விசாரித்தபொழுது, “தமிழ் நாடகத்திற்காக இவ்வளவு உழைக்கும் முதலியாருக்கு, நான் இவ்வளவாவது செய்யலாகாதா’ என்று கூறி, அதன் விலையைப் பெற மாட்டேன் என்று மறுத்தார். அச் சமயம் என் மனத்தில் உதித்ததை நான் இங்கு எழுதுகிறேன். “கர்ணனுக்கப்புறம் கொடையில்லை” என்னும் பழமொழி தவறு; கர்ணனுக்கப்புறமும் கலியுகத்திலும் சில கொடையாளிகள் இருக்கின்றனர்” என்று எண்ணினேன். அந்தக் கவசத்தின் விலையைப் பற்றி நான் அதிகமாகப் பாராட்டவில்லை; அதையளித்த மனத்தையும், அதைக் கொடுத்த விதத்தையுமே அதிகமாக மதிக்கிறேன். இவரது அசூயை இல்லாத தயாள குணத்தை நினைக்கும் பொழுது, ஒரு முறை எங்கள் சபையின் நாடகத்திற்காக, சுவர்களில் ஒட்டிய பிளேகார்ட்ஸ் நாடக விளம்பரங்களை எல்லாம் கிழித்தெரியும்படிச் சில சிறுவர்களுக்குத் துட்டு கொடுத்து, அவ்வேலையைச் செய்யும்படி செய்த, மற்றொரு நாடக சபையின் காரியதரிசியின் “குணமும்” எனக்கு நினைவு வருகிறது! இதில் எது மேம்பட்டது, எது தாழ்ந்தது என்று நான் இங்கெழுத வேண்டிய நிமித்தமில்லை. சென்னை ராஜதானி முழுவதும் கன்னையா என்ற பெயர், அவர் இறந்தும், பல வருடங்கள் போற்றப்படும் என்பதற்கு ஐயமில்லை; மேற்குறித்தபடி நடந்த சபையின் பெயர், அடியுடன் நசித்துப் போயிற்று. அப்பெயரை நான் இங்கு எழுதினாலும், இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரியாததாகும். ஆகவே, “அறத்தாறு இதுவென வேண்டா"’ என்ற திருவள்ளுவர் வாக்கியத்துடன் இவ்விஷயத்தை முடிக்கிறேன்.

மறு வருஷமாகிய 1921ஆம் வருஷத்தில் ஒரு துக்ககரமான விஷயமும் பல சந்தோஷகரமான விஷயங்களும்