பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/572

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

557


நேர்ந்தன. துக்ககரமான சமாச்சாரத்தை முன்பு எழுதியிருக்கிறேன். இவ்வருஷம் என் பூர்வ கர்ம வசத்தால், என் அருமைத் தமயன் ஆறுமுக முதலியாரை இழந்தேன். ஒரு நாள் காலை, நான் துங்கிக்கொண்டிருந்த பொழுது என் குமாரன் என்னை அவசரமாக எழுப்பி, சிந்தாதரிபேட்டையிலிருந்து, என் தமயனார் இறந்து போனதாகக் கடிதம் வந்ததைக் காண்பித்தான்! அதற்கு முந்திய தினம் அவர் தன் வழக்கம்போல் எங்கள் சபைக்கு வர, அவருடன் நானும் இன்னும் சில நண்பர்களும் சீட்டாடியது நன்றாய் எனக்கு ஞாப்கமிருக்கிறது. அப்பொழுது அவருக்கு உடம்பு ஒன்றுமில்லை. தன் வழக்கம் போல்தான் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். 12 மணி நேரத்திற்குள்ளாக அவருக்கு மிருத்யு நேரிடுமென்று நான் கனவிலும் நினைத்தவனல்ல. அப்படியிருக்க, மறுநாள் அவர் காலமாய் விட்டார் என்ற செய்தி வந்தவுடன் என் மன நிலைமை எத்தன்மையதாயிருக்க வேண்டுமென்று என் நண்பர்கள் யோசித்துக்கொள்ளலாம். அதைப்பற்றி இங்கு எழுதி என் நண்பர்களுக்கும் கொஞ்சம் துக்கம் விளைவிக்க எனக்கு மனமில்லை. ஆங்கிலக் கவியொருவர், “நகைத்திடுவாயின் நீ - உலகம் நகைத்திடும் உன்னுடன்; அழுதிடுவாயின் நீ -அழவேண்டும் தனியே” என்று எழுதியுள்ளார்.

அவர் திடீரென்று மடிந்ததற்கு ஏதோ ரத்தக்குழாய் உடைந்தது காரணமென்று விசாரித்தறிந்தேன். அவரது புத்திரன் பதினைந்து பதினாறு வயதுடையவன்; எங்கள் குலத்தில் மிகுந்த புத்திசாலியாகப் படித்துக் கொண்டிருந்தவன் விஷ ஜ்வரத்தினால் இறந்தது முதல் அவர் பழைய ஆறுமுக முதலியாராகவே இல்லை. மேலுக்கு மாத்திரம் முன்போல் எல்லோருடனும் பேசிக்கொண்டு தன் வேலையைச் செய்து வந்தபோதிலும், அவர் இருதயமானது அப்பெரும் துக்கத்தினால் குன்றியது என்பதை நான் நன்றாய் அறிவேன். இங்ஙனம் அவரது ஏக புத்திரன் அவருக்கு முன்பாகச் சென்றமையால் நானே அவருக்கு தீக்கடனையும் நீர்க்கடனையும் செலுத்த வேண்டியதாயிற்று. எங்கள் சபையின் தசராக் கொண்டாட்டத்திற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்தான் மேற்சொன்ன விபத்து நேரிட்டபடியால், இவ் வருஷம் தசராக் கொண்டாட்டத்தில் நானும்