பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/575

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

560

நாடக மேடை நினைவுகள்


“பிறகு எனக்கு என்ன புதிய நாடகம் எழுதித் தரப் போகிறீர்கள்?” என்று என்னைக் கேட்டுக் கொண்டிருப்பார். இதற்காக நான் அவர்மீது குற்றம் கூறுவதில்லை. அவர் என்னை அப்படித் தொந்தரவு செய்து வந்ததற்காக, நான் இப்பொழுது நினைத்துப் பார்க்கும்பொழுது, பெரும் நன்றி பாராட்ட வேண்டியவனாயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஏனெனில், நான் சாதாரணமாக, சோம்பேறிக் குணமுடையவனென்றே நினைக்கிறேன். இப்படி அவர் என்னை அடிக்கடி இடைவிடாது தொந்தரவு செய்துகொண்டு வந்தபடியினால்தான் 1895ஆம் வருஷம் முதல் 1913ஆம் வருஷம் வரையில் நான் எழுதிய நாடகங்களுள் பெரும்பாலானவற்றை எழுதி முடித்தேன் என்று உறுதியாய் நம்புகிறேன்; இத் தூண்டுகோலில்லாவிடின் அவற்றுள் நான்கில் ஒரு பங்குகூட எழுதி முடித்திருக்க மாட்டேன் என்பது என் தீர்மானமான எண்ணம். 1924ஆம் வருடம் முதல் இந்த வேலையை எனது தற்கால உயிர் நண்பர் கே. நாகரத்தினம் ஐயர் எடுத்துக் கொண்டிருக்கிறார்! இதைப்பற்றிப் பிறகு எழுத வேண்டி வரும்.

மேற்சொன்னபடி ரங்கவடிவேலு என்னை வற்புறுத்தியபோது, ஸ்ரீ சுப்பிரமணியர் பாத்திரத்தை என்னால் ஆட முடியாது; அதைச் சரியாக ஆட என்னிடம் சக்தியில்லை; ஸ்ரீராமர் பாத்திரத்தை ஆடாததற்கு என்ன ஆட்சேபணை இருந்ததோ, அந்த ஆட்சேபணை இதற்கும் இருக்கின்றது எனத் தெரிவித்தேன். அப்போது இதற்குள்ளாக வக்கீல் பரீட்சையில் தேறி, என்னுடன் ஜுனியர் ஆக வக்கீல் வேலை பார்த்து வந்த இவர், வக்கீல்களின் நியாயப் பிரகாரம், “எப்படி ஸ்ரீராமர் வேடம் ஒருமுறை பூண்டிரோ அம்மாதிரியாகவே சுப்பிரமணியர் வேடமும் எனக்காக ஒருமுறை பூணும்” என்று வாதித்தார். இந்த வாதுக்கு வகை சொல்ல அறியாது ஒருவாறு ‘ஆகட்டும்’ என்று இசைந்தேன். அதன்பேரில், இதற்கு முன்பாக ஒருமுறை எங்கள் சபையில் ஆடப்பட்ட பி.எஸ். துரைசாமி ஐயங்கார் எழுதிய “வள்ளித் திருமணம்” என்னும் நாடகத்தை எடுத்துக்கொண்டு, அதில் முன் பாகத்தையும், கடைசிப் பாகத்தையும் அப்படியே வைத்துக்கொண்டு, அந் நாடக