பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/586

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

571


பார்க்க, ரிசர்வ்ட் வகுப்பிலிருந்தவர்களெல்லாம் ஏதோ படுத்துக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தது போல் தோன்றியது! இதென்ன விஷயம் என்று பிறகு நான் விசாரித்த பொழுதுதான் மேற்சொன்ன உண்மை எனக்கு வெளியாகியது. இந்தச் சாய்வு நாற்காலிகள் அதிக இடத்தை அடைத்துக் கொள்வதுமன்றி, மேடையின் மீதிருந்து பார்ப்பவர்களுக்கு அவற்றிலுள்ளவர்கள் ஏதோ நாடகத்தைக் கவனியாது தூங்குவது போல் தோன்றுகிறபடியால், இவ்வழக்கத்தை விட்டு, நேராக உட்காரும் பெரிய நாற்காலிகளை இவ்விடத்திலுள்ள பெரிய மனிதர்கள் உபயோகிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். இங்கு வந்த பெரிய மனிதர்கள் எங்கள் சபையின் நாடகங்களை மிகவும் நன்றாய்க் கவனித்து வந்தவர்கள் என்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. அதற்கிரண்டொரு உதாரணங்கள் இங்கு எழுதுகிறேன். ‘லீலாவதி-சுலோசனா’ நாடகத்தில், சுலோசனா வேடம் தரித்த ரங்கவடிவேலு, ஸ்ரீதத்தனைக் கைவளை சீனில் க்ஷணநேரம் பார்த்த பார்வையை மெச்சி, ஹாலில் உட்கார்ந்திருந்த ஒரு பெரிய மனிதர் தன்னையுமறியாதபடி “சுட்டுவிட்டாளையா கண்ணால்!” என்று உரக்கக் கூவினார். இது சபையிலுள்ளவர்களுக்கும், எனக்கும் ஆனந்தத்தை விளைவித்தது. இதை இங்கு நான் எடுத்து எழுதியதற்கு இன்னொரு காரணமுண்டு. இக்காட்சியை நடத்தும் பொழுது அநேக நாடக சபைகளும், கம்பெனிகளும் ரசாபாசமாக்குகின்றனர். சுலோசனை ஸ்ரீதத்தனை ஒரு க்ஷணநேரம்தான் தன் கடைக்கண்ணால் பார்க்கவேண்டியது. அதை விட்டு அதிக நேரம் பார்த்தால் தவறாகும். ஆந்தை விழிப்பது போல் அறுபது விநாடி விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தால், அதைவிட ரசாபாசம் வேறு கிடையாது. இது ஒரு முக்கியமான கட்டம். சபையோர்களுக்கெல்லாம் இதனால் சந்தோஷத்தை உண்டு பண்ணலாம் என்றெண்ணி, அதிக நாழிகை பார்ப்பது, கற்புடைய ஸ்திரீயாகிய சுலோசனைக்கடுக்காது. அன்றியும் இந்தக் கட்டத்தில், ஸ்ரீதத்த வேஷதாரி செய்யும் ஒரு குற்றத்தினையும் எடுத்தெழுதுகிறேன். அந்த க்ஷணத்தில் சுலோசனையின் கண்களைத் தன் கண்கள் கொண்டு சந்தித்தவன், உடனே தன்