பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/593

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

578

நாடக மேடை நினைவுகள்


ராமருமாக அதில் நடித்து வந்தோம். அவருக்குப் பிற்காலம் இரண்டொரு முறை இந்நாடகம் ஆடியபொழுது கே. நாக ரத்தினம் ஐயர் என்னுடன் சீதையாக வந்திருக்கின்றனர்.

மேற்சொன்ன ராமதாஸ் நாடகமன்றி இவ்வருஷத்தில் எங்கள் சபை தெலுங்குப் பிரிவு ஆடிய, காலஞ்சென்ற கிருஷ்ணமாச்சார்லு எழுதிய, ‘பிரமேளா’ என்னும் நாடகத்திலும், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் நானும் வேஷம் பூண்டு நடித்திருக்கிறோம். இவ்வாறு இரண்டு மூன்று தெலுங்கு நாடகங்களில் நாங்களிருவரும் ஒன்றாய் சேர்ந்து நடிக்கவே, ‘அடடா! தெலுங்கில்கூட இவர்களிரு வரும் ஒன்றாய்ச் சேர்ந்து நடிக்கிறார்கள்’ என்று எங்களுடைய நண்பர்கள் ஏளனம் செய்தனர். இவ்வாறு தெலுங்கில் நாங்களிருவரும் நடிப்பது வேடிக்கையாயிருந்த போதிலும், இதில் ஒரு குறையுண்டென எண்ணுகிறேன். நாங்கள் இருவரும் தமிழர்கள். இரண்டு பெயரும் எவ்வளவுதான் தெலுங்கு படிக்கத் தெரிந்தவர்களாயிருந்தபோதிலும், இருவரும் சமஸ்கிருதம் கற்றவர்களானபடியால், தெலுங்கு அட்சரங்களை உச்சரிப்பதில் கஷ்டமுடையவர்களா யில்லாதிருந்தபோதிலும், தெலுங்கில் பேசும் போது ஏதாவது குற்றங்கள் வந்துவிடும். ஆகவே, இதைப்பற்றி என் அபிப்பிராயம் என்னவென்றால், கூடுமானவரையில் அந்தந்தப் பாஷையைத் தாய் பாஷையாக உடையவர்களே அந்தந்தப் பாஷையில் நடிக்க வேண்டுமென்பதே. அப்படி ஏதாவது நடிக்க வேண்டி வந்தால் சிறுபாகங்களை எடுத்துக் கொள்ளலாமே யொழிய, பெரிய பாத்திரங்கள் எடுத்துக் கொண்டு நடிப்பது தவறேயாகும். எனது நண்பர்களில் ஒருவர் ஏறக்குறைய தெலுங்கில் நன்றாய்ப் பேசக்கூடியவர். ஒரு தெலுங்கு நாடகத்தில் ஒரு பெரிய பாகத்தை எடுத்துக் கொண்டு நடித்தபொழுது, ஏதோ ஒன்றிரண்டு எழுத்துகளைச் சரியாக உச்சரிக்கவில்லையென்று ஹாலில் வந்திருந்த சில ஆந்திராபிமானிகள் அவரை ஏளனம் செய்ததை என் காதாரக் கேட்டிருக்கிறேன். அப்படி ஏளனம் செய்தவர்கள் மீது நான் குறை கூறமாட்டேன். தமிழ் நாடகமொன்றில், ஒரு தெலுங்கன் அவன் எவ்வளவு தான் கெட்டிக்காரனான ஆக்டராக இருந்தபோதிலும், தமிழில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு தமிழ்ப்