பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/596

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

581


போய் வந்த பிரயாணமாகையால், இதைப்பற்றிச் சற்று விவரமாக எழுத விரும்புகிறேன்.

திருவனந்தபுரத்திற்குப் போகவேண்டுமென்று யார் முதலில் பிரேரேபணை செய்தார்களோ எனக்கு ஞாபகமில்லை. நான் செய்யவில்லை யென்பது நிச்சயம். ஏனெனில், இந்த வார்த்தை முதலில் எங்கள் நிர்வாக சபையார் முன்னிலையில் வந்தபோது, அவ்வளவு தூரம் செலவு செய்துகொண்டு போய் வருவதென்றால் சபைக்குக் கட்டி வருமா என்று நான் சந்தேகப்பட்டது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. அன்றியும் என்ன காரணத்தினாலோ, இதுவரையில், வெளியூருக்குச் சபை போவதென்றால் மிகவும் குதூகலத்துடன் ஆமோதித்த எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு, தனக்கு அங்கு போவது இஷ்டமில்லை யென்று எனக்குத் தெரிவித்தார். அவரது அபிப்பிராயம் இப்படியிருந்தபோதிலும், நிர்வாக சபையில் ஒருமுறை அங்கு போவது தீர்மானிக்கப்பட்ட பிறகு நாம் சபையுடன் போய்த்தான் தீரவேண்டுமென்று நான் அவரை வற்புறுத்தினேன். அதன் பேரில் என் வார்த்தைக்கிணங்கி ஒப்புக் கொண்டார். திருவனந்தபுரம் போகும் போது வழியில் திருநெல்வேலியிலும் சில நாடகங்கள் ஆடவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இச்சமயம் எனது நண்பர் ச. ராகவாச்சாரியார் தமிழ் கண்டக்டராயிருந்தார். அவர்தான் இவ்விரண்டு இடங்களுக்கும் வருவது அசாத்தியம், ஒருக்கால் தான் சில நாடகங்களுக்கு மாத்திரம் வந்து ஆக்டு செய்ய முடியும், வேறு யாரையாவது இந்தப் பிரயாணத்திற்குக் கண்டக்டர் இன்சார்ஜாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அதன்பேரில் சில ஆக்டர்கள் ரகசியமாய் எனது நண்பர் சத்தியமூர்த்தி ஐயரைக் கண்டக்டராக நியமிக்க வேண்டுமென்று பேசிக் கொண்டார்களாம். இதனை எப்டியோ அறிந்த எனதுயிர் நண்பர் என்னிடம் வந்து, “இப்படி இவர்களெல்லாம் தீர்மானித்திருக்கிறார்களாம், அவர்கள் போய்வரட்டும்; நாம் போகாது நின்று விடலாம்” என்று சொன்னார். அதன் பேரில் அவருக்கு நான் சமாதானம் சொல்லி, ‘அவர்கள் அப்படிச் செய்தபோதிலும், நாம் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டும். இந்தப் பிரயாணத்தில் வெளியூர்களில் ஏறக்குறைய ஒரு மாதத்தில்