பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/597

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

582

நாடக மேடை நினைவுகள்


15 நாடகங்களை ஆடுவதென்றால் மிகவும் சிரமமான காரியம்; எனக்கோ வயதாகிறது; இனி இக்கஷ்டம் என்னால் சுமக்க முடியாதென்று நானே வேண்டாம் என்று சொல்லலாமென்றிருந்தேன். மற்றவர்களுக்கும் வேறு கண்டக்டரை நியமித்துக்கொள்ள அபிப்பிராயம் இருந்தால் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. “வியாதிக்காரன் விரும்பிய ஔஷதமும் பாலே, வைத்தியன் கொடுத்த ஔஷதமும் பாலே” என்கிற பழமொழிப்படி, நான் விரும்பியதும் அவர்கள் விரும்பியதும் ஒன்றேயாயது மிகவும் நலமாயிற்று. எனக்கென்னவோ, இப் பிரயாணம் சபைக்கு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் கொண்டு வருமென்று மனத்திற்படுகிறது. ஆகவே, இதனால் வரும் “நற்பெயரோ கெட்ட பெயரோ அவர்கள் பொறுப்பாக இருக்கட்டும். வெளியூர்களுக்குப் போய் நாடகங்கள் ஆடி, கீர்த்தியும் லாபமும் பெற்று வருவதன் கஷ்டம் மற்றவர்களுக்கும் தெரிந்தால்தானே நல்லது” என்று நியாயங்கள் எடுத்துக் கூறி, அவர் மனத்தைத் திருப்பினேன். கடைசியில் உங்களுக்காக நான் ஒப்புக் கொள்கிறேன்; இதனால் பல கஷ்டங்கள் வருமென்று எனக்குத் தோன்றுகிறது என்று சொன்னார். அவர் வாக்கு எவ்வளவு தூரம் பலித்தது என்பதை இனி நான் எழுதப் போகிறதைப் படிப்பவர்கள் அறிவார்கள்.

சென்னையிலிருந்து சபை புறப்படுவதற்கு இரண்டு நாள் முன்பாக, திடீரென்று என் கழுத்தும் முகமும் வீங்கி ஜுரமுண்டாயிற்று. இதென்ன விபரீதம் என்றெண்ணி, உடனே என் குடும்ப வைத்தியரை வரவழைத்து எப்படியாவது என்னை சுவஸ்தப்படுத்தி இரண்டு தினங்களுக்குள், திருநெல்வேலி போகும்படிச் செய்ய வேண்டும் என்று வேண்டினேன். அவர் சந்தேகப்பட்டு, மேஜர் எல்விஸ் துரையை வரவழைத்து, அவருடன் கலந்து பேசிப் பிறகுதான் எனக்குப் பதில் உரைக்கக்கூடுமென்றார். அவர் என் வியாதி, தீராத மிகவும் அபாயகரமான வியாதியாகிய பிளட் பாய்சனிங் (blood poisoning) ஆக இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டதாகப் பிறகுதான் என்னிடம் தெரிவித்தார். என்ன செலவானாலும் பெரிதல்ல; அந்தப் பெரிய ஆங்கில வைத்தியரை வரவழையுங்கள் என்று