பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/598

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

583


சொன்னேன். அதன்பேரில் மேஜர் எல்விஸ் வந்து பார்த்து, இது அப்படிப்பட்ட அபாயகரமான வியாதியல்ல, மம்ப்ஸ் (Mumps) என்னும் வியாதி; இது நாலாநாள் சொஸ்தமாகும், சற்றும் பயப்பட வேண்டாம்; இது கொஞ்சம் தொத்துவியாதியானபடியால், நாலாவது தினம்தான் பட்டணம் விட்டுப் போகலாம் என்று சொல்லிவிட்டுப் போனார். அப்போது எனக்கு 104 டிகிரி ஜுரம் இருந்தது. உடனே என் தேகஸ்திதியை எழுதி டாக்டர்கள் இப்படிச் சொல்கிறார்கள் என்கிற விவரத்தை சபைக்குத் தெரிவித்தேன். உடனே சில அங்கத்தினர்கள் அன்றிரவு என்னை வந்து பார்த்தார்கள். அவர்களில் சிலர் நான் ஏதோ சாக்குச் சொல்லுகிறேன் என்று சந்தேகித்தனர் போலும். பிறகு உண்மையில் நான் மிகவும் அசௌக்கியமாயிருப்பதைக் கண்டறிந்தவர்களாய் என்ன செய்வது என்று என்னைக் கேட்டதற்கு, ‘என்னால் சபைக்குத் தடங்கல் ஒன்றும் வேண்டாம். உங்களுக்கு எது யுக்தமாயிருக்கிறதோ அப்படியே செய்யுங்கள்’ என்று சொன்னேன். அதன் பேரில் சத்தியமூர்த்தி ஐயர், முதல் நாடகமாக வைத்துக்கொண்ட லீலாவதி-சுலோசனாவை மாற்றி, ‘நீ வராத மார்க்கண்டேயர் நாடகம் வைத்துக் கொள்கிறோம்’ என்றார். ‘அப்படியே செய்யுங்கள்’ என்று பகர்ந்தேன். மறுநாள் நானும் ரங்கவடிவேலுவும் தவிர மற்றவர்களெல்லாம் புறப்பட்டுப் போயினர். அச்சமயம் ரங்கவடிவேலு திருக்கழுக்குன்றம் போயிருந்தார் ஏதோ காரணத்தினால். அங்கிருந்து செங்கல்பட்டுக்கு வந்து ரெயிலில் சபையோருடன் கலந்துகொண்டு திருநெல்வேலிக்குப் போகும்படியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் எங்கு வருத்தப்படப் போகிறாரோ என்று என் தேகஸ்திதியைப் பற்றி நான் அவருக்கு எழுதவில்லை . ஆகவே, தானும் திருநெல்வேலிக்குப் புறப்பட்டுப் போக, செங்கல்பட்டில் வந்து சபையோர் இருந்த ரிசர்வெட் காம்பார்ட்மெண்டில் ஏறின பிறகுதான், அவருக்கு என் தேகஸ்திதியும் நான் அந்த வண்டியில் இல்லாததும் தெரிந்தது. “இதைக் கேட்டவுடன், நான் இடி விழுந்தவன் போல் ஆனேன்! இன்னது செய்வது என்று தெரியாது திகைத்து நின்றேன்” என்று பிறகு அவர் எனக்குக் கூறிய வார்த்தைகளை இங்கு எழுதுகிறேன். பிறகு, ஏற்றிய தன்