பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/601

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

586

நாடக மேடை நினைவுகள்


ரங்கவடிவேலுவும்) நாடகசாலைக்கு இன்று கொஞ்சம் வந்து போக வேண்டும் என்று வற்புறுத்தினர். எனக்கு அசௌக்கியமான உடம்புடன் பிரயாணம் செய்ததனால் மிகவும் இளைப்பாயிருக்கிறதெனச் சொல்லியும் அவர்கள் பலவந்திக்கவே, இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறதென, அவர்களுள் ஒருவரை ஒரு பக்கமாக அழைத்துக்கொண்டு போய் என்ன சமாச்சாரம் என்று மெல்ல விசாரிக்க, அவர் கீழ்வருமாறு தெரிவித்தார்: “இந்த ஊர் இரண்டு கட்சியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது, பிராமணாள் கட்சியென்றும் பிராமணர் அல்லாதார் கட்சியென்றும். இரண்டாவது கட்சியார், நீங்களெல்லாம் (என்னையும், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவையும் குறிப்பிட்டு) வருகிறீர்களென்று, கோயிலிலிருந்து யானை, வாத்தியம் முதலிய மரியாதைகளுடன் உங்களையெல்லாம் ஸ்டேஷனிலிருந்து ஊர்வலமாக அழைத்துப் போகவேண்டுமென்று ஏற்பாடு செய்திருந்தார்கள். கடைசி நிமிஷத்தில் நீங்கள் இருவரும் வரவில்லையென்று கண்டறிந்து அந்த ஏற்பாடுகளையெல்லாம் ரத்து செய்து விட்டனர். இப்பொழுதும், அநேகர் நீங்கள் ஏதோ சபையின்மீது மனஸ்தாபப்பட்டு இவ்வூருக்கே வரவில்லை யென்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். “அவர்கள் வராவிட்டால் நாங்கள் நாடகம் பார்ப்பதற்கு வரமாட்டோம்” என்று கட்டுப்பாடாயிருக்கிறார்களாம். ஆகவே, நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் என்பது இந் நகரவாசிகளுக்குத் தெரிய வேண்டும். அதற்காகத்தான் உங்களை இன்றிரவு எப்படியாவது கஷ்டத்தைப் பாராமல் கொஞ்ச நேரமாவது நாடக சாலைக்கு வந்து போகவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறோம்” என்று தெரிவித்தார். இதென்ன தர்மசங்கடமாயிருக்கிறது! நானாவது சபையின்மீது மனஸ் தாபப்படுவதாவது என்று எண்ணினவனாய், அப்படிப்பட்ட எண்ணத்தை நீக்க வேண்டியது என் கடமை என்று கருதி, என் தேக அசௌக்கியத்தையும் பாராமல், முற்றிலும் வாடாத முக வீக்கத்துடன், ஒரு சால்வையைப் போர்த்துக் கொண்டு நாடகசாலைக்குப் போய்ச் சேர்ந்தேன். என் நண்பருடன் காற்று அதிகமாய்ப் படாதபடி வேஷம் தரிக்கும் இடத்தில் நான் உட்கார்ந்திருக்க, “அது உதவாது, வெளியில் வந்து உட்கார வேண்டும்” என்று எனது நண்பர்