பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/602

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

587


கள் பலவந்திக்க, நாடக ஆரம்பத்திற்குச் சில நிமிஷங்களுக்கு முன், நானும் ரங்கவடிவேலுவும், ஹாலில் வந்து உட்கார்ந்திருந்து, அங்கு நாங்கள் கண்ட எங்கள் பழைய நண்பர்கள் சிலருடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் பிறகே எங்கள் ஜாகைக்குப் போனோம்.

நாங்கள் ஆடுவதற்கில்லாதபடியால், எங்கள் சபை சாதாரணமாக வைத்துக் கொள்ளும் முதல் நாடகமாகிய லீலாவதி-சுலோசனாவை மாற்றி, அன்று மார்க்கண்டேயர் நாடகம் வைத்துக் கொண்டார்கள். இந்த மார்க்கண்டேயர் நாடகத்திற்கு மிகவும் குறைந்த வரும்படி வந்தது. ஜனங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளைவிட ஜனங்களில்லா நாற்காலிகள் அதிகமாயிருந்தன.

இதற்கு இரண்டாம் நாள் லீலாவதி-சுலோசனா நாடகத்தில் எனதுயிர் நண்பரும் நானும் ஆடினோம். இந் நாடகத்திற்கு, மார்க்கண்டேயர் நாடகத்திற்கு வந்ததைவிட மூன்று நான்கு பங்கு அதிகமாக ஜனங்கள் வந்தனர். இங்கு நடத்திய மற்ற நாடகங்கள் வள்ளி, சாரங்கதரன், நந்தனார், மனோஹரன். இந் நாடகங்களில், எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு ஆடிய நாடகங்களின் வரும்படியையும், அவர் ஆடாத நாடகங்களின் வரும்படியையும் ஒத்துப் பார்க்குமிடத்து அவர் ஒருவரால் எங்கள் சபைக்கு மிகவும் அதிக வரும்படி வந்தது என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டியவனாயிருக்கிறேன். இதனால் எங்கள் சபையின் சில ஆக்டர்களுக்கு அவர் மீது கொஞ்சம் பொறாமை யுண்டாயிற்று என்று திருநெல்வேலியில் நேரிட்ட சில வியவஹாரங்களினால் ஊகிக்க வேண்டியவனாயிருக்கிறேன். அவைகளை இங்கு எழுதுவதனால், என்னுடைய சில நண்பர்களுக்கு வருத்தமுண்டாகுமேயொழிய இதைப் படிக்கும் எனது நண்பர்களுக்கு ஒரு பிரயோஜனமும் உண்டாகாதென நம்பி, அவைகளை இங்கு வரையாதொழித்தேன். இம்முறை திருநெல்வேலிக்குப் போயிருந்த பொழுது ஒருநாள் நாங்கள் எல்லோரும் திருச்செந்தூருக்குப் போய், சுப்பிரமணிய ஸ்வாமி தரிசனம் செய்து சந்தோஷமடைந்தது மிகவும் நன்றாய் என் மனத்தில் படிந்திருக்கிறது. அன்றியும் இவ்வூரிலிருந்தபொழுது எமது நண்பர்களாகிய