பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/603

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

588

நாடக மேடை நினைவுகள்


கோமதிநாயகம் பிள்ளையவர்கள், கலியாணசுந்தரம் பிள்ளையவர்கள் பி.ஏ., பி.எல்., சாது கணபதி பந்துலு அவர்கள் பி.ஏ.,பி.எல்., சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் பி.ஏ., பி.எல்., ஆகியவர்கள் எங்களுக்கு விருந்தளித்ததை நன்றியறிதலுடன் இங்கு எழுதுகிறேன்.

இச்சமயம் திருவாங்கூர் மஹாராஜாவுக்கு என் நண்பர் மகா-ள-ள-ஸ்ரீ திவான்பஹதூர் டி. ராகவையா என்பவர் மந்திரியாக இருந்தார். இவர் அநேக வருஷங்களாக எங்கள் சபையின் அங்கத்தினராக இருந்தவர்; எங்கள் காரியதரிசிகளிலொருவராகிய டி. வெங்கடரமணய்யாவுக்கு பந்து; எனக்கு மிகவும் தெரிந்த நண்பர். இவருக்கு நாங்கள் முதலில் எழுதியபொழுது சபைக்கு வேண்டிய உதவியைச் செய்வதாக இவர் எங்களுக்குக் கூறிய உறுதிமொழியே, எங்கள் சபை இவ்வூருக்குப் போய் நாடகமாட வேண்டுமென்று எங்களை உந்தியது.

திருவனந்தபுரத்தில் நாங்கள் ஆட வேண்டிய நாடக சாலைக்குப் பக்கத்திலேயே எங்களுக்கு இருப்பிடம் கிடைத்தது; இது எங்களுக்கு மிகவும் சௌகர்யமாயிருந்தது. இவ்வூரில் நாங்கள் ஆடிய நாடகங்கள் மொத்தம் பத்தாம்; ஒன்பது மேற்குறித்த நாடகசாலையிலும், ஒன்று மகாராஜாவின் அரண்மனையிலும். இங்கு முதல் நாடகமாக “லீலாவதி-சுலோசனா” என்பதை எங்கள் வழக்கம்போல் ஆடினோம். அதற்கு நாங்கள் எண்ணிய அளவு அதிக வசூலாகாவிட்டாலும் நல்ல வசூலே ஆயிற்று. இரண்டாவது நாடகமாகிய மார்க்கண்டேயர் நாடகத்திற்கு மிகவும் குறைந்த வசூலாயிற்று. மூன்றாவது நாடகமாகிய, “மிருச்ச கடி” என்பதற்கு அதுகூட இல்லை . இந்த மிருச்சகடி சம்ஸ்கிருதத்திலாடப்பட்டது. சென்னையிலிருந்து புறப்படுவதற்கு முன்பே, சம்ஸ்கிருதத்தில் இவ்விடம் நாடகம் வைத்துக் கொண்டால், ஜனங்கள் அதிகமாக வருவது சாத்தியமல்லவே என்று நான் சந்தேகப்பட்டேன். ஆயினும் சம்ஸ்கிருத நாடகத்தை ஆட வேண்டுமென்று இச்சை கொண்ட சிலர், திருவனந்தபுரத்தில் எல்லோருக்கும் சம்ஸ்கிருதம் நன்றாய்த் தெரியும். ஆகவே, சென்னையை விட அங்கு அதிக ஜனங்கள் வருவார்கள் என்று கூறினார் கள். அவர்கள் கூறியது தவறாயிற்று; நான் எண்ணியதுதான்